CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, April 30, 2009

நாளைய வரலாற்றின் வாழ்த்து..!

வருங்கால் நிதியமைச்சர்..!
பதிவுலக பட்டிஷ்டா...!
தமிழக விடிவெள்ளி...!
அமெரிக்காவின் விடியாத வியாழன்..!
தன்மான கரடி..!
தேர்தல் சூறாவளி..!
முகவையின் முத்து..!
ந‌ம் வலையுலக சொத்து.!
ராமநாதபுரத்து மின்னல்..!
ஈடு இனையில்லா இடி..!
கலியுக வள்ளல்..!
சின்னப் பகவதி..!
சீறி வரு காளை..!
புரட்சி புறா..!
தன்னலமற்ற தலைவன்..!


நாளைய‌ தமிழக வரலாற்றை டெல்லியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் போகும் எங்கள் வீரத்தளபதி "ஜே.கே.ரித்திஷ்" சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...

இவண்
மன்ற நிர்வாகிகள்..

13 comments:

லோகு said...

பிரச்சாரத்துக்கு போகலையா மாப்ள..

SUBBU said...

//தன்மான கரடி..!//

போட்டோவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லனு சொன்னா கேக்கவா போறிங்க :))))))))))))))))

எம்.எம்.அப்துல்லா said...

தம்பி டக்ளஸ் அவர்களின் ஆர்வத்தையும் சேவையும் பாராட்டி மனம் மகிழ்ந்து நான் வகித்து வரும் பொருளாளர் பதவியை தம்பி டக்ளஸ்சிற்கே அளிக்கிறேன். இளையவர்களுக்கு மூத்தவர்கள் வழிவிடும் உயர்ந்த காலாச்சாரம் அண்ணனின் பெயரைச் சொல்லி இன்றிலிருந்து துவங்கட்டும்.

புதிய பொருளாளர் டக்ளஸ்.. வாழ்க!
புதிய பொருளாளரின் புகழ்... ஓங்குக!

வால்பையன் said...

//நாளைய‌ தமிழக வரலாற்றை டெல்லியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் போகும் எங்கள் வீரத்தளபதி "ஜே.கே.ரித்திஷ்" சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...//

இதை நான் வழிமொழிகிறேன்!

கார்க்கிபவா said...

இவரின் ஆர்வத்தை புரிந்து அவருக்கு தக்க சமயத்தில் சரியான பதவி வழங்கிய கழக போர்ப்படை தளபதி

பற்றியும் ஏதாவ்து சொல்லுங்கப்பா....


டக்ளஸ்... நீ கலக்குப்பா

KADUVETTI said...

:))))))))

Prabhu said...

எங்கள் அண்ணன், மதுரை பெற்ற மாணிக்கம் டக்ளஸுக்கும், அவருக்கு பதவி தந்த வள்ளல் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.

Vidhya Chandrasekaran said...

புதிய பொருளாளருக்கு கொ.ப.சேவின் வாழ்த்துக்கள்.

ஆ.சுதா said...

அய்யோ... தல.. கலக்கிட்டிங்கபா

|அமெரிக்காவின் விடியாத வியாழன்..!|

ரொம்ப ரசிச்ச்சச வரி.
கவித கவித...!!!!

ஊர்சுற்றி said...

இந்த படம் எப்படி... கிராஃபிக்ஸ்ல பண்ணினதா? :))

கலக்கல்.

Raju said...

சும்மா பதவி மட்டும் கொடுத்தா எப்புடி..?
மன்றக் கணக்குல எவ்வளவு எங்கங்க இருக்குன்ற டிட்ட்டெய்லு கொடுங்க அபதுல்லா அண்ணே...!

Sukumar said...

வான்கோழி பிரியாணி கொடுக்கும் வள்ளல் அண்ணன் ரிதீஷிர்க்காக ப்ளாக் ஆரம்பித்து அவரது புகழை உலகெங்கும் பரப்பிடும் தல டக்லஸ் வாழ்க....

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009