அன்புடையீர்,
உபயகுச்சலோபரி.நிகழும் மங்களகரமான் விரோதி வருடம், ஆவணி மாதம், 12ம் நாளும் புனித ரமலான் மாதம் 7ம் நாளும் ஆகஸ்ட் மாதம் 28ம் நாளுமான வெள்ளிக்கிழமையன்று ஏதோ ஒரு நட்சத்திரமும் ஒரு கெரகமும் மரணயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், மாலை 7.30 மணிக்குமேல் 7.31 மணிக்குள் ஏதோ ஒரு லக்கினத்தில், இடைத் தேர்தலில் எங்கள் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், கலைஞர் தொலைக்காட்சியில்,பதிவுலக பட்டிஷ்டா,தமிழக விடிவெள்ளி,முகவையின் முத்து,நம் வலையுலக சொத்து,சின்னப் பகவதி, சிங்காரத் தமிழன், அண்ணன்
ஜே.கே.ஆர்.எம்.பி. அவர்கள் நடித்த சூப்பர் டூப்பர் மெகா ஹிட் திரைப்படமான "நாயகன்"(THE REAL HERO) திரைப்படம் திரையிட இருப்பதால், தாங்கள் தங்கள் சுற்றம் சூழ, டிவி முன்பு அமர்ந்து வெள்ளிக்கிழமையன்று கலைஞர் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிறச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படத்தைப் பார்த்து பிறவிப்பயனையும் அடையலாம்.
தங்களன்புள்ள,
ஜே.கே.ஆர். எம்.பி.மன்ற நிர்வாகிகள்.
வலையுலகம்.
அவ்வண்ணமே கோரும்,
கலைஞர் தொலைக்காட்சி.
"கலை"யுலகம்.
டிஸ்கி: இப்படத்தை 7.30 மணிக்கு திரையிடுவதில் எவ்வித உள்குத்து இல்லையென்று கலைஞர் டிவி,நமக்கு ஃபேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
Friday, August 21, 2009
மோட்சம் அடைய எளிய வழி, (வலியுடன்).
Labels: கலைஞர் டிவி, நிகழ்வுகள்.நாயகன்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
மற்ந்து விடாதீர்..மறந்தும் இருந்து விடாதீர்.
வரும் வெள்ளிக்கிழமை 7.30 மணி.
டக்ளஸ் மீ தி ஃபர்ஸ்ட்!!!
//தேவன் மாயம் said...
டக்ளஸ் மீ தி ஃபர்ஸ்ட்!!!//
எதுக்கு தேவா சார்? பின்னூட்டம் இட்டதிலா அல்லது படம் பார்க்கவா?
ம்ம்ம்ம்.எங்களுக்குத்தான் கொடுத்து வைக்கலை.நீங்களாவது அனுபவியுங்க மக்காஸ்....... :))
ஹி.. ஹி...
கட்டாயமா மறக்க மாட்டோம். ஏற்கெனவே ஒரு தடவை படம் தொலைக்காட்சியில போட்டப்போ போட்ட சத்தம் விசில்-ல பக்கத்து வீட்டுக்காரங்க கடுப்பாகிட்டாங்க!
:)))
kalakitta tambi.. keep it up
பால் குடமெல்லாம் ரெடி பண்ணிக்கோங்க! ஓபனிங் சீன்ல சூடம் காட்டுறோம்.
எத்தனை பேர் மருத்துவமனையில்!
சான்ஸே இல்லப்பா!! :))
//ஜே.கே.ஆர்.எம்.பி. அவர்கள் நடித்த சூப்பர் டூப்பர் மெகா ஹிட் திரைப்படமான "நாயகன்"(THE REAL HERO) திரைப்படம்
'உலக அளவில் சூப்பர் டூப்பர் மெகா ஹிட்' என்று சேர்த்துக் கொல்லும்மாறு கேட்டுக் கொல்கிறோம்.
<<<
ஒரு கெரகமும் மரணயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்
>>>
ஏன் நாயகன் படத்திற்கு என்ன குறைச்சல்... ஏன் இந்த எதிர்ப்பு?
மிகவும் வருத்ததுடன்
ஆகா அருமை
Post a Comment