அன்புடையீர்,
உபயகுச்சலோபரி.நிகழும் மங்களகரமான் விரோதி வருடம், ஆவணி மாதம், 12ம் நாளும் புனித ரமலான் மாதம் 7ம் நாளும் ஆகஸ்ட் மாதம் 28ம் நாளுமான வெள்ளிக்கிழமையன்று ஏதோ ஒரு நட்சத்திரமும் ஒரு கெரகமும் மரணயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், மாலை 7.30 மணிக்குமேல் 7.31 மணிக்குள் ஏதோ ஒரு லக்கினத்தில், இடைத் தேர்தலில் எங்கள் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், கலைஞர் தொலைக்காட்சியில்,பதிவுலக பட்டிஷ்டா,தமிழக விடிவெள்ளி,முகவையின் முத்து,நம் வலையுலக சொத்து,சின்னப் பகவதி, சிங்காரத் தமிழன், அண்ணன்
ஜே.கே.ஆர்.எம்.பி. அவர்கள் நடித்த சூப்பர் டூப்பர் மெகா ஹிட் திரைப்படமான "நாயகன்"(THE REAL HERO) திரைப்படம் திரையிட இருப்பதால், தாங்கள் தங்கள் சுற்றம் சூழ, டிவி முன்பு அமர்ந்து வெள்ளிக்கிழமையன்று கலைஞர் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிறச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படத்தைப் பார்த்து பிறவிப்பயனையும் அடையலாம்.
தங்களன்புள்ள,
ஜே.கே.ஆர். எம்.பி.மன்ற நிர்வாகிகள்.
வலையுலகம்.
அவ்வண்ணமே கோரும்,
கலைஞர் தொலைக்காட்சி.
"கலை"யுலகம்.
டிஸ்கி: இப்படத்தை 7.30 மணிக்கு திரையிடுவதில் எவ்வித உள்குத்து இல்லையென்று கலைஞர் டிவி,நமக்கு ஃபேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
Friday, August 21, 2009
மோட்சம் அடைய எளிய வழி, (வலியுடன்).
Posted by Raju 12 comments
Labels: கலைஞர் டிவி, நிகழ்வுகள்.நாயகன்
Tuesday, July 21, 2009
ஜே.கே.ரித்திஷ் M.P. யிடம் பிடித்த 10.
* நாயகன் பட கிளைமெக்ஸுல மீன் தொட்டிய துப்பாக்கியால, கரெக்டா அந்த புல்லட்டோட டயாமீட்டர் அளவுக்கு ஒரு ஓட்டை போடுவீங்களே அது பிடிக்கும்.
* நீங்க துப்பாக்கி புடிக்கிற அழகுக்காகவே நாயகன் படத்தை நூறுதடவை பார்க்கலாம்.
* ஆட்டோ டிரைவர்ல இருந்து ஆளுநர் வரைக்கும் அள்ளி அள்ளிக் குடுப்பீங்களே,அது பிடிக்கும்.
* கானல் நீர் படத்து டிரையிலர்ல இன்ட்ரோ சீன்ல அப்ப்டியே பேன்ட் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு ஸ்டைலா நடந்து வருவீங்களே, அத பிடிக்காதவன் எவனாச்சும் இருக்க முடியுமா..
* யாரோ ஒரு பிரபல அரசியல் தலைவரிடம் "அமைச்சர் பதவிக்கி எவ்ளோ செலவாகும்..?"ன்னு நீங்க கேட்டீங்களாமே.
அந்த அப்பாவித்தனம் உஙகளத் தவிர வேற யாருக்கு வரும் தலைவா..?
* நீங்க நாயகன் படத்துல, சங்கீதாவ காப்பத்துற அந்த அலட்டலில்லாத நடிப்புக்காக எத்தனை தடவை வேணும்ன்னாலும், யாரு வேணும்ன்னாலும் சங்கீதாவக் கடத்திட்டுப் போகலாம்.
* உங்களோட அரசியல் போஸ்டருக்கு நீங்க அனுமதிச்சு ரசிச்சு போடுற வசனத்துக்கே, நாங்களெல்லாம் அடிமை தலைவரே. மறக்க முடியுமா அந்த "வடபழனி வாக்காளப் பெருமக்களை".
* படத்துல நடிக்கிற அந்த கேரக்டராவே மாறுற திறமையும் அழகும் உங்களத் தவிர வேற யாருக்கு வரும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்..ஸாரி..ஸாரி..கேப்போம்.
* என்னாதான் எல்லாரும் ஓட்டுனாலும் தைரியமா "வேட்டைப்புலி" வேலைகளப் பாத்துக்குட்டி இருக்கீங்களே, அந்த அசாத்திய தைரியம் பிடிக்கும்.
* பத்தாவதா நிறைய வருது. உங்களோட காஸ்ட்யூம் , உங்க ஹுயூமர் சென்ஸ், அரசியல் நடவடிக்கைகள்ன்னு எல்லாமே பிடிக்கும் தலைவரே.
என்றென்றும் உங்கள் வழியில் டக்ளஸ்...
Posted by Raju 11 comments
Labels: மற்றவை.
Saturday, July 11, 2009
யாருடா அது ஆன்டர்சன்னு...!
யாரோ சாம் ஆன்டர்சன்னாம், ஜீ டிவியாம், அதுல இன்னைக்கு நைட்டு அந்தாளு நடிச்ச, யாரோ யாரோடி, (ஸ்டெப்னீ)படம் போடுறாங்களாம்.போடட்டும்.தப்பில்லை. ஆனா, அந்தாளை எங்க அண்ணன் கூட ஒப்பிட்டு, அடுத்த வீரத்தளபதி,வருங்கால முதல்வர்,வருங்கால அமெரிக்க பிரதமர்ன்னு சொன்னீங்க.அவ்வளவுதான்,நாங்கல்லாம் "நாயகன்" படத்தையே கலைஞர் டி.வியில போட்டவிய்ங்க. எங்க அண்ணன் ஏதோ கொஞ்ச காலம் அரசியல், எம்.பி., பிரச்சாரம், பதவியேற்பு, மக்கள் குறை கேட்புன்னு பிஸியா இருந்தாக்கா, நீங்க என்னாடான்னா, அதுக்குள்ள புது ஆளை ஃபீல்டுல இறக்கப் பாக்குறீங்களா..? பிச்சு புடுவேன் பிச்சு. நாங்களும் ரெடியாயிட்டிதான்டி இருக்கோம். தயாரியிட்டு இருக்கு "வேட்டைப்புலி". அனுஷ்கா வேட்டைக்காரன்லயும் பாவனா அசல்லயும் பிஸியா இருக்குறதுனால் எங்க அண்ணனுக்கு சரியான ஜோடி இன்னும் அமையல. அதுக்குக்காகத்தான் வெயிட்டிங். மவனே, இன்னும் கொஞ்ச நாள்ல டரியலாகப் போறீங்க..!
எங்க அண்ணன் டெல்லி போயிட்டார்ல. அதனால நாங்க பாலிவுட்லயும் கால் வைக்கப் போறோம். ஆமாப்பு.."வேட்டைப்புலி"ய "துஷ்மன்"ன்ற பேர்ல ஹிந்திலயும் டப்பிங் பண்ணி வெளியிடப் போறோம். பத்திக்கிச்சுடா பாலிவுட்டு. சும்மா ஷாரூக்கான், அமீர்கான்லாம் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடிப் போயிரணும் ஓடி.. இப்போ த்ரிஷாவும் பாலிவுட்டுக்கு போயிருக்குறதுனால அவங்களும் கதாநாயகி லிஸ்ட்ல இருக்காங்க என்பதையும் இங்கு தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.Of Course ஜெனீலியா also.
ரத்தம் கொதிக்கின்றது. நாங்கள் ஓபாமாவேயே எங்கள் அண்ண்னோடு ஒப்பிடுவதை எங்கள் புகழுக்கு இழுக்கு என கருதிக் கொண்டிருக்கின்றோம். இந் நேரத்தில் சாம் ஆன்டர்சன்னை எங்களோடு ஒப்பிடுவது எங்களுக்கு மன சங்கடத்தையே தருகின்றது.இப்பிடி அகிலத்தையே இன்னும் சிறிது காலத்தில் ஆட்டிப் படைக்கப் போகின்ற எங்கள் தன்னிகரற்ற தலைவனை "சாம் ஆனடர்சன்"னோடு ஒப்பிட்டு எங்கள் அண்ணனின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதை ஒருக்காலும் தாங்க மற்றும் அனுமதிக்க முடியாது என்பதை எங்கள் மாமன்றத்தின் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறோம்.இவை அனைத்தும் கட்டாயம் எதிர்கட்சிகளின் சதியாகத்தான் இருக்கும் என 48422655வது ஒன்றியக் குழு தெரிவித்துள்ளதாக அறிகின்றோம்.
என்னைக்குமே நாங்கதான்டா டாப்பு.
மத்தவனெலாம் டூப்பு.
வருது பாரு வேட்டைப்புலி.
வந்தா,மவனே நீ காலி..
எங்க அண்ணன்தாண்டா சிங்கம்.
தமிழ்நாட்டின் தங்கம்.
சீண்டிப் பாக்காத சிங்கத்த..
தாங்க முடியாது அதோட சீற்றத்த.
முடிஞ்சு போகும் ஓங்கத.
எதிர்த்து நிக்காத முன்னாடி.
அப்பறமா, ஃபீல் பண்ணுவ பின்னாடி.
இது சிங்கத்தோட கோட்டைடா.
தில் இருந்தா வால ஆட்டுடா.
வெட்டிடுவோம் ஒட்ட நறுக்கி.
தாங்கமாட்ட தளபதியோட வெறிக்கி.
அண்ணன் கண்ணசைசா,
கொதிக்கும்டா கோலிவுட்டு.
பத்துக்கிரும்டா பாலிவுட்டு.
அடுத்த டார்கெட்டு டோலிவுட்டு.
2020ல ஹாலிவுட்டு.
இப்போ இருக்குறது பார்லிமென்ட்டு.
எங்க தளபதி சிரிச்சா தென்றலு.
அடிச்சா புயலு.
புடிச்சா முயலு
கொதிச்சா ஆயிலு.
மவனே,பேசாம போயிரு.
இங்ஙணம்.
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் M.P. ரசிகர் மன்றம்.
Posted by Raju 19 comments
Labels: அடுத்த அட்டாக், எதிர்ப்பு, சாம் ஆன்டர்சன், ஜீ டிவி
Friday, May 15, 2009
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
எங்க தல சிங்கம்டா…
தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் தலைக்கு சீட் அறிவித்தவுடன் ஆ வென பிளந்த வாய்கள் தான் அனேகம். அவரின் மக்கள் செல்வாக்கு, அரசியல் அனுபவம், பொது சேவைகள் என எதுவும் தெரியாத தற்குறிகள் ஏதோ நாயகன் பட வெற்றிதான் அவருக்கு சீட் வாங்கித் தந்ததாக உளறினார்கள். பாஜகவின் திருநாவுக்கரசரை எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியுமா என்று சொன்னவர்களும் உண்டு.
இதோ எங்க சிங்கம் 3500 வாக்கள் முன்னிலையில் இருக்கிறது. பிராச்சர களத்தில் நாங்கள் குதித்த போது தலைமை எங்களுக்கிட்ட கட்டளை என்னத் தெரியுமா? இப்போதே அதிகம் பேச வேண்டாம். நம் வெற்றி பேசட்டும் என்றார்கள். இதொ கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி.
இது முடிவல்ல..
இது ஆரம்பம்.
இனிமேல் தான் பூகம்பம்….
Posted by ஜே.கே.ஆர் ரசிகர்கள் 16 comments
Thursday, April 30, 2009
நாளைய வரலாற்றின் வாழ்த்து..!
வருங்கால் நிதியமைச்சர்..!
பதிவுலக பட்டிஷ்டா...!
தமிழக விடிவெள்ளி...!
அமெரிக்காவின் விடியாத வியாழன்..!
தன்மான கரடி..!
தேர்தல் சூறாவளி..!
முகவையின் முத்து..!
நம் வலையுலக சொத்து.!
ராமநாதபுரத்து மின்னல்..!
ஈடு இனையில்லா இடி..!
கலியுக வள்ளல்..!
சின்னப் பகவதி..!
சீறி வரு காளை..!
புரட்சி புறா..!
தன்னலமற்ற தலைவன்..!
நாளைய தமிழக வரலாற்றை டெல்லியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் போகும் எங்கள் வீரத்தளபதி "ஜே.கே.ரித்திஷ்" சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...
இவண்
மன்ற நிர்வாகிகள்..
Posted by Raju 13 comments
Labels: வாழ்த்து.
Sunday, April 12, 2009
தளபதியின் வாழ்த்து..!
நம்ம வீரத்தளபதி அண்ணன் "ஜே.கே.ரித்திஷ்" அவர்களின் அனல் பறக்கும் சூறாவளிப் பிரச்சாரம் இன்னும் சில நாட்களில் இராமநாதபுரத்தில் தொடங்க உள்ளது.இராமநாதபுர மக்களே டரியலாகுங்கள்..ச்சே..தயாராகுங்கள். தளபதி அவர்கள் போஸ்டர்களுக்கு ஸ்டில் கொடுக்கும் வேலையில் ஒருகையில் துப்பாக்கியையும் ஒருகையில் வேட்டியையும் பிடித்தபடி பிஸியாக உள்ளார் என கழக உடன்பிறப்புகளும் கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.நம் வீரத்தளபதிக்கு ஆதரவாக,சில திரையுலக முண்ணனி(?) நட்சத்திரங்களும் பிரச்சாரத்தில் இறங்கப் போகின்றன.எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், எதிர்கட்சிகள் "தமிழ் புத்தாண்டு" என்ற ஒன்றை கொண்டு வந்து அண்ணனின் வெற்றியை தடுக்கப் பார்க்கின்றன.இருந்தாலும் அண்ணன் அவர்கள் தன் மன்ற நிர்வாகிகளின் மூலம் ரசிகர்களாகிய உங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
இதோ அந்த செய்தி:
ம்ம்.. நாளை நமதே.. நாற்பதும் நமதே...ச்சே இராமநாதபுரமும் நமதே.
இவண்:
மன்ற நிர்வாகிகள்.
Posted by Raju 19 comments
Labels: வாழ்த்து.
Tuesday, April 7, 2009
தளபதிக்கு புதுப் பட்டம்...
கழகக் கண்மணிகளே,
தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது, நம்ம பொருளாளர் அண்ணன் வேற காசு கொடுக்கறேன்னு சொல்லிட்டார்.தேர்தல் பிரச்சாரப் பாடல் வேற எழுதியாகி விட்டது. மீஜிக் போட ஏ.ஆர்.ரகுமானிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்கு கழகப் போர்ப்படைத் தளபதி அண்ணன் கார்க்கி சென்றிருப்பதாக தகவல். போஸ்டர் மற்றும் தோரணங்களுக்கு சொல்ல வேண்டும்.இப்போது பிரச்சனை என்னவென்றால் நம்முடைய தளபதிக்கு இப்போதுள்ள பட்டங்கள் எல்லாம் சரியாக,அவரது பெர்ஸ்னாலிட்டிக்கு பொருந்தாததாக இருக்கின்றதென பரவலான அதிர்ப்தி நிலவுவதாக எமக்கு தகவல் வந்துள்ளது.ஆகவே,தேர்தலை முன்னிட்டு அவருக்கு புது பட்டம் தருவதற்காக வாக்காளப் பெருமக்களாகிய உங்களிடன் ஆய்வு நடத்தவே இந்த பதிவு. சங்கத்து சிங்கங்களும் உங்கள் எண்ணத்தில் இருக்கும் பெயர்களை, அள்ளித்தெளிக்கும்படி மிகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இப்படிக்கு.
என்றென்றும் தளபதியின் வழியில் டக்ளஸ்,
தேர்தல் பொறுப்பாளர்.
Posted by Raju 22 comments
Labels: களத்தில்..