கழகக் கண்மணிகளே,
தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது, நம்ம பொருளாளர் அண்ணன் வேற காசு கொடுக்கறேன்னு சொல்லிட்டார்.தேர்தல் பிரச்சாரப் பாடல் வேற எழுதியாகி விட்டது. மீஜிக் போட ஏ.ஆர்.ரகுமானிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்கு கழகப் போர்ப்படைத் தளபதி அண்ணன் கார்க்கி சென்றிருப்பதாக தகவல். போஸ்டர் மற்றும் தோரணங்களுக்கு சொல்ல வேண்டும்.இப்போது பிரச்சனை என்னவென்றால் நம்முடைய தளபதிக்கு இப்போதுள்ள பட்டங்கள் எல்லாம் சரியாக,அவரது பெர்ஸ்னாலிட்டிக்கு பொருந்தாததாக இருக்கின்றதென பரவலான அதிர்ப்தி நிலவுவதாக எமக்கு தகவல் வந்துள்ளது.ஆகவே,தேர்தலை முன்னிட்டு அவருக்கு புது பட்டம் தருவதற்காக வாக்காளப் பெருமக்களாகிய உங்களிடன் ஆய்வு நடத்தவே இந்த பதிவு. சங்கத்து சிங்கங்களும் உங்கள் எண்ணத்தில் இருக்கும் பெயர்களை, அள்ளித்தெளிக்கும்படி மிகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இப்படிக்கு.
என்றென்றும் தளபதியின் வழியில் டக்ளஸ்,
தேர்தல் பொறுப்பாளர்.
Tuesday, April 7, 2009
தளபதிக்கு புதுப் பட்டம்...
Labels: களத்தில்..
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அண்ணனுக்கு தமிழக ஒபாமா என்ற பட்டம் ஏற்கனவே இருப்பதால், அதை விட சிறந்த பட்டம்...
பூலோக இந்திரன், கருப்பு கதிரவன்...
உலக ரட்சகன்
நடமாடும் சூரியன்
பாட்டளியின் பங்காளி
உண்மைத் தலைவன்..
இன்னும் வரும்..
வரட்டும்....
போர்ப் படைத் தளபதின்னா சும்மாவா?
:))))))))
அமைதியின் நாயகன் ஜே.கே.ஆர்
ஆட்சி நாயகன் ஜே.கே.ஆர்
இந்தியாவின் இமயம் ஜே.கே.ஆர்
ஈதல் அரசன் ஜே.கே.ஆர்
உத்தமர் ஜே.கே.ஆர்
ஊரார் போற்றும் ஜே.கே.ஆர்
எழை பங்காளன் ஜே.கே.ஆர்
ஏழ்மை போக்கி ஜே.கே.ஆர்
.
.
ஒளவையாரின் பேரன் ஜே.கே.ஆர்
இப்படி பல அடை மொழிகள் சொல்லாலும்
அடைமொழி இல்லாமல் தன்னுடைய பெயரெ அடைமொழியாக வைக்கும் அளவிற்கு இருக்கும் வாழும் வரலாறிக்கு எதற்க்கப்பா அடைமொழி
டக்ளஸ் இனி "ரித்திஸ் டக்ளஸ்" என்று அழைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கு.
சங்கத்தில் பதவி வாங்க யாருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்..
எனக்கு 23 வது வட்ட துணை செயலாளர் பதவியாவது ஏற்பாடு செய்யுங்க..
லோகு
சங்கத்துல மெம்பராவதுக்கு புது ரூல்ஸ் போட்டிருக்கோம். நீங்க அப்துல்லா அண்ணனோட நேர்காணல் அட்டெண்ட் பண்ணுங்க. கேள்விகள் தளபதிய பத்தி மட்டும் தான் இருக்கும். தேறினா சங்கத்து நிதிக்கு துட்ட வெட்டிட்டு பதவி வாங்கிட்டுப் போங்க. டக்ளஸ் என்னதான் புதுசா பட்டம் கொடுத்தாலும் வீரத்தளபதிங்கற பட்டம் தான் பவரா இருக்கு.
வித்யா
கொ.ப.செ
தகுந்த ஆலோசனைகள் வழங்கிய மன்றத்தின் கொ.ப.செ வித்யா அக்கா அவர்களுக்கு நன்றி..
அண்ணன் வீரத்தளபதி அவர்கள் பற்றிய ஒரு சீரியஸ் பதிவு இதோ..
http://muttalpaiyan.blogspot.com/2009/04/jk.html
\\கருப்பு கதிரவன்...\\
நம்ம தல கருப்பு கிடையாதே!
\\"ரித்திஸ் டக்ளஸ்"\\
தல க்கி பேரு கேட்டா நமக்கு கொடுக்குறாங்க!
சங்கம் செம சுறுசுறுப்பாத்தான்யா இருக்கு!
\\வீரத்தளபதிங்கற பட்டம் தான் பவரா இருக்கு.\\
ஆனா பழசாயிட்ச்சே
அண்ணனைப் பற்றிய பதிவிற்கு தாமதமாக வந்து வரலாற்றுப் பிழை புரிந்து விட்டேன். மன்னிக்கவும்.
//டக்ளஸ் என்னதான் புதுசா பட்டம் கொடுத்தாலும் வீரத்தளபதிங்கற பட்டம் தான் பவரா இருக்கு.
//
அதே!அதே! :)
இந்த பிளாக்குக்கு தளபதி நிதி உதவி பண்றாரா என்ன?
\\இந்த பிளாக்குக்கு தளபதி நிதி உதவி பண்றாரா என்ன?\\
அபதுல்லா அண்ணனதான் கேக்கனும்...
அவர்தான் பொருளாளர்.
அண்ணன், எனக்கும் பதவி குடுங்க! நான் மதுர தொகுதி கொ.ப.செ. வா இருந்துட்டு போறேன்.
//அண்ணனுக்கு தமிழக ஒபாமா என்ற பட்டம் ஏற்கனவே இருப்பதால்
உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவ சொல்லறது ? சிங்கத்தலைவர் அந்த stage எல்லாம் எப்பவோ தாண்டியாச்சு.. வேணும்னா ஒபாமாவை அமெர்காவின் வீரத்தளபதி என்று சொல்லலாம்!!
\\உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவ சொல்லறது ? சிங்கத்தலைவர் அந்த stage எல்லாம் எப்பவோ தாண்டியாச்சு.. வேணும்னா ஒபாமாவை அமெர்காவின் வீரத்தளபதி என்று சொல்லலாம்!!\\
வழிமொழிகிறேன் புவனேஷ்...
அண்ணன் எங்க சேது சீமையிலே
இருந்து வந்ததாலே "சேதுசிங்கம்"
எப்படி இருக்கு?
நன் ராமநாதபுரம் தொகுதி
அண்ணனுக்காக என் கிராமத்தில் ஏற்கனவே பிரசாரத்தை ஆரம்பித்து விட்டேன்
arumai
Hi
அகில உலக அல்டிமேட் உலக நாயக இளைய புரட்சி சூப்பர் ஸ்டார் !!
இம்புட்டு நாளா இப்படி ஒரு ரசிகர் மன்றம் இருக்கிறது தெரியாம போச்சே !!!!!
தலைவரை பத்தி சொல்லிகிட்டே போகலாம். இதோ சில
கலியுக அவதாரம்.
தி.மு.க வின் வருங்காலம்.
நாளைய முதல்வர்.
கலைஞரின் அரசியல் வாரிசு.
இருபதிவோராம் நூற்றாண்டின் விடிவெள்ளி.
ஏழைகளின் காவலன்.
கந்துவட்டி பணக்காரன்.
பகுத்தறிவு யானை.
பொறுமையில் எருமை.
உழைப்பதில் மாடு.
தமிழின (அ)சிங்கம்.
சுமப்பதில் கழுதை.
நன்றியில் நாய்.
கூடிவாழ்வதில் காக்கை.
இந்த *** போதுமா!!! இன்னும் கொஞ்சம் வேணுமா???
டேய் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா ......
Post a Comment