CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, February 6, 2009

வீரத்தளபதியின் அடுத்த படம்

தளபதி படத்துக்கப்புறம் நம்ம தலைவர் வீரத்தளபதி ஜே.கே.ஆர் நடிக்கும் அடுத்த படத்தின் கதை கசிந்துள்ளது. மூன்று படங்களிலும் அனல் பறக்க ஆக்ஷன் இருந்ததால், பெண்களை குறிப்பாக இளம்பெண்களை கவரும் விதமாக முழுக்க முழுக்க காதல் சூப்(எத்தன நாள் தான் ரசமே சொட்டும்) ஆறாக ஒடும் யூத் சப்ஜெக்டில் நடிக்கிறார். ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது
என்பதற்காக இரண்டு சண்டைக்காட்சிகள் படத்தில் உண்டு. படத்தின் ஒன்லைன் இதுதான். மிகவும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸாப்ட்வேர் கம்பெனியில் project manager பதவியில் இருக்கும் ஜே.கே.ஆர்க்கும், அதே கம்பெனியில் HR Executive வேலையில் இருக்கும் அனுஷ்காவிற்க்கு லவ்வோ லவ். அனுஷ்கா அந்த கம்பெனி ஓனரோட பொண்ணு. Recession காரணமாக கம்பெனியை மூட வேண்டிய சூழ்நிலை. இதனால் மனமுடைந்து போன அனுஷ்காவின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். காதலியின் தந்தை மரணத்துக்கு பழிவாங்கவும், கம்பெனியை சரிவிலிருந்து மீட்கவும் ஜே.கே.ஆர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே மிச்சக் கதை:)

முதல் பாதி இந்தியாவிலேயே படமாக்கப்படுமாம். கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்து உழைப்பால் முன்னேறுகிறார் வீரத்தளபதி. ஆதலால் காலேஜ் படிக்கும் பையனின் தோற்றத்துக்கு படாத பாடு பட்டு ச்சே கடும் உழைப்பால் மூன்றிலிருந்து மூணேமுக்கால் கிலோ வரை எடை குறைக்க யோசித்திருக்கிறாராம் வீரத்தளபதி. பிற்பாதியில் recessionஐ அழிக்க அதைத் தேடி அமெரிக்கா செல்கிறார். பிற்பாதி முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படும். ஜே.கே.ஆருக்கும், அனுஷ்காவிற்க்கும் உதவும் அமெரிக்க வாழ் தமிழ்பெண்ணாக நடிக்க காத்ரீனா கைஃபிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஜே.கே.ஆரும் காத்ரீனாவும் ஆடிப்பாட ஐட்டம் நம்பர் ஒன்றுக்கு இசையமைத்து தருமாறு ரஹ்மான் மிரட்டப்பட்டுள்ளார் ச்சே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் ஜே.கே.ஆரும் recessionம் மோதிக் கொ(ல்லும்)ள்ளும் காட்சி பெரும் பொருட்செலவில் உயர்ந்த கிராபிக்ஸ் தரத்தில் படமாக்கவும் முடிவுசெய்துள்ளார்களாம்.

ஜே.கே.ஆரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் அடுத்த பொங்கல் பரிசாக அமையும். மேலும் இந்தப் படத்திற்க்கு பொருத்தமான தலைப்பை ரசிகர்களே பரிந்துரைக்கலாமாம். சிறந்த தலைப்பு மன்றத்தின் மூலம் ஜே.கே.ஆரிடம் பரிந்துரைக்கப்பட்டு தக்க சன்மானம் வழங்கவும் முடிவாகியுள்ளது. ஆகவே சங்கத்து சிங்கங்கள் தங்களின் பொன்னான தலைப்பை அள்ளித்தெளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

22 comments:

Vidhya Chandrasekaran said...

யாராவது கீறிங்களா??

கார்க்கிபவா said...

இருக்கேன்

கார்க்கிபவா said...

பதிவுக்கு நன்றி

narsim said...

வெள்ளிக்கிழம தான.. வீக் எண்ட் பரவசமா??

முரளிகண்ணன் said...

வீரத் தளபதி ஜே கே ரீத்திஷ், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிக் கொண்டுள்ளார். அதை பதிவு செய்யாமல் கொ ப செ செயல்படுவது கன்டிக்கத்தக்கது.

வால்பையன் said...

அருமை!

தமிழகம் முழுவதும் கட்-அவுட்டுகள் வைக்க உடனடியாக நிதி திரட்ட வேண்டும். பொருளாலருக்கு யாராவது உடனே தந்தி அடிங்க

☀நான் ஆதவன்☀ said...

படத்துக்கு தலைப்பு "சத்திய சோதனை"

எம்.எம்.அப்துல்லா said...

ம்ம்ம்ம்ம்ம்....என்னாலே ம்ம்ம்முடியல :)))

☀நான் ஆதவன்☀ said...

கடை காத்து வாங்குது. பேசாம நம்ம மக்கள் நாயகன் இராமராஜன் சைடு வந்திருங்களேன். வீக்லி இரண்டு தடவை பிரியாணி வாங்கி தரேன்

எம்.எம்.அப்துல்லா said...

//வீரத் தளபதி ஜே கே ரீத்திஷ், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிக் கொண்டுள்ளார். அதை பதிவு செய்யாமல் கொ ப செ செயல்படுவது கன்டிக்கத்தக்கது.

//

ஆமா!ஆமா!

மணிகண்டன் said...

இவ்வளவு பெரிய ஒன் லைன் ஸ்டோரி சொல்றீங்களே வித்யா !

கார்க்கிபவா said...

/நான் ஆதவன் said...
கடை காத்து வாங்குது. பேசாம நம்ம மக்கள் நாயகன் இராமராஜன் சைடு வந்திருங்களே//

ஹலோ followers எத்தனை பேரு பாருங்க.. காத்து வாஙுதாம்?உங்க ஆளுக்கு முதல்ல கடைய தொறங்க.. அப்புறம் பார்க்கலாம் போடிய

முரளிகண்ணன் said...

\\ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடிகர் ரித்தீஷ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.

'தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம்' என்ற அமைப்பின் தலைவராக உள்ளார், கானல் நீர், நாயகன் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜே.கே.ரித்தீஷ்குமார்.

இவர் சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார்:

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு 1,200 கிராமங்களில் நடைபெறுகின்றன. 67 ஆயிரம் பேர் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள்.

இந்த வருடம் இதுவரை, 200 ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளுக்கு ஒரு சான்று. எனவே அதை நடத்தியே தீருவோம். இந்த விளையாட்டை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்துள்ளேன், என்றார் ரித்தீஷ்.

பின்னர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் 10 பேருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை நடிகர் ரித்தீஷ் நிதி உதவி அளித்தார்.\\

Thanks

www.thatstamil.com

ரவி said...

இன்னும் எனக்கு சங்கத்தில் பொறுப்பு தராததை கண்டித்துத்து ஐரோப்பா முழுவதும் ஜேகேஆர் ரசிகர்களை திரட்டி போராடுவேன்.

மேலும் பரிசை வென்று சாதனை படைத்தது யார் என்றும் சொல்லாமல் ஏமாற்றும் தலைகளை கண்டிக்கிறேன்

Ganesan said...

ஐயா,

வீர தளபதி அவர்களின் என்னுடைய பதிவு படிச்சுட்டு அவர பெருமை படுத்துங்களேன்.

kaveriganesh.blogspot.com

Ganesan said...

ஜே.கே.ஆர்க்கும், அதே கம்பெனியில் HR Executive வேலையில் இருக்கும் அனுஷ்காவிற்க்கு லவ்வோ லவ்.




ஐயோ, என்ன கொடுமையடா சாமி, சாகா வரம் பெற்ற , ஏழைகளின் நாயகன்,மண்ணின் மைந்தன், ஜல்லிகட்டை காக்க வந்த காவல் தெய்வம், எங்களின் வீர தளபதிக்கு ஒரே ஒரு ஹீரோயினா, இந்த படத்திற்கு 10 ஹீரோயின் இல்லாவிடின் ,

நாளை காலை 10 மணிக்கு உலக நாடுகளில் உள்ள எல்லா அமெரிக்க தூரகங்களீன் முன்பு மாபெரும் கண்டண ஆர்பாட்டமும்,JKR புகழ் மதுரை வான் கோழி பிரியாணி திங்கும் போராட்டம் தமிழகத்தின் தலைமை செயலகம் முன்பு நடைபெறும் என்பதை அகில உலக JKR ரசிக மன்றத்தின் சார்பில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பின் குறிப்பு: சுமார் 5 ல‌ட்ச‌ம் JKR முரட்டு ப‌க்த‌ர்க‌ள் வான் கோழி பிரியாணி திங்கும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்க‌ள்.ப‌திவுக்கு முந்த‌வும்.

ஷங்கர் Shankar said...

அமெரிக்காவில் சூட்டிங் நடக்கும்போது அகில உலக அமெரிக்க ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றதின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படவேண்டும்!

ஜே.கே.ரித்தீஷ் புகழ் உலகமெங்கும் பரவட்டும்!

அசோசியேட் said...

/////"கிளைமாக்ஸ் காட்சியில் ஜே.கே.ஆரும் recessionம் மோதிக் கொ(ல்லும்)ள்ளும் காட்சி ---"////
பின்னே -விட்டு விடுவோமா என்ன ? ஜே.கே ஆரா -கொக்கா ?

அ.மு.செய்யது said...

நானும் வீர தளபதியின் ரசிகன்..

ஆனால் இந்த வலைதளத்தை பின்பற்ற பயன்படும் சுட்டியை காணவில்லை.

உதவி செய்யுங்களேன்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

லோயர் said...

எங்கள் 'நாயக' தலை, ஒபாமாவின் வாரிசு , சந்திரனில் படத்தை ரேலீசாக வைக்கபோகும் சிங்கம் ஜெ.கே.ஆர். ஐ நக்கல் , நளினம் கலந்து பாராட்டு தெரிவிப்பவர்களை நன்றி கூற கடமைப்ப்டிருபவன் ...ஜெ.கே.ஆர் கனடா கிளையின் ஒரே ஒரு உறப்பினர்..லோயர்

geethappriyan said...

என்ன கொடுமை சரவணா……
ஊருக்கு விடுமுறையில் போனால் இந்த பேமானியின் உருவம் தான் ஊர் முழுக்க,இந்த அரை கிறுக்கனுக்கு ஏன் நேரத்தை செலவு செய்து பிளாக் உருவாக்கினீர்கள்,கலை ரசிகர் கண்மணிகளே…
அதற்கு பதில் மாட்டு டாக்டர் படங்களை பலமுறை பார்த்து ,வயிறு வலித்து சிரிக்கலாம்,குட்டிக்கரணம் கத்துக் கொண்டது போலவும் ஆயிற்று..என்னத்தை சொல்ல எல்லாம் கலைக்கு வந்த சாபக்கேடு,
இவ்வளவு நல்ல பிளாக் எழுதும் திறமையை வைத்து சுப்ரமண்யபுரம் சசிகுமாருக்கு எழுதியிருக்கலாம்,கலை வளத்த பெருமையாவது கிடைத்திருக்கும்,சப்ப ஆளை ஏனையா பெரிய ஆள் ஆக்குறீஙக