CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, February 6, 2009

வீரத்தளபதியின் அடுத்த படம்

தளபதி படத்துக்கப்புறம் நம்ம தலைவர் வீரத்தளபதி ஜே.கே.ஆர் நடிக்கும் அடுத்த படத்தின் கதை கசிந்துள்ளது. மூன்று படங்களிலும் அனல் பறக்க ஆக்ஷன் இருந்ததால், பெண்களை குறிப்பாக இளம்பெண்களை கவரும் விதமாக முழுக்க முழுக்க காதல் சூப்(எத்தன நாள் தான் ரசமே சொட்டும்) ஆறாக ஒடும் யூத் சப்ஜெக்டில் நடிக்கிறார். ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது
என்பதற்காக இரண்டு சண்டைக்காட்சிகள் படத்தில் உண்டு. படத்தின் ஒன்லைன் இதுதான். மிகவும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸாப்ட்வேர் கம்பெனியில் project manager பதவியில் இருக்கும் ஜே.கே.ஆர்க்கும், அதே கம்பெனியில் HR Executive வேலையில் இருக்கும் அனுஷ்காவிற்க்கு லவ்வோ லவ். அனுஷ்கா அந்த கம்பெனி ஓனரோட பொண்ணு. Recession காரணமாக கம்பெனியை மூட வேண்டிய சூழ்நிலை. இதனால் மனமுடைந்து போன அனுஷ்காவின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். காதலியின் தந்தை மரணத்துக்கு பழிவாங்கவும், கம்பெனியை சரிவிலிருந்து மீட்கவும் ஜே.கே.ஆர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே மிச்சக் கதை:)

முதல் பாதி இந்தியாவிலேயே படமாக்கப்படுமாம். கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்து உழைப்பால் முன்னேறுகிறார் வீரத்தளபதி. ஆதலால் காலேஜ் படிக்கும் பையனின் தோற்றத்துக்கு படாத பாடு பட்டு ச்சே கடும் உழைப்பால் மூன்றிலிருந்து மூணேமுக்கால் கிலோ வரை எடை குறைக்க யோசித்திருக்கிறாராம் வீரத்தளபதி. பிற்பாதியில் recessionஐ அழிக்க அதைத் தேடி அமெரிக்கா செல்கிறார். பிற்பாதி முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படும். ஜே.கே.ஆருக்கும், அனுஷ்காவிற்க்கும் உதவும் அமெரிக்க வாழ் தமிழ்பெண்ணாக நடிக்க காத்ரீனா கைஃபிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஜே.கே.ஆரும் காத்ரீனாவும் ஆடிப்பாட ஐட்டம் நம்பர் ஒன்றுக்கு இசையமைத்து தருமாறு ரஹ்மான் மிரட்டப்பட்டுள்ளார் ச்சே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் ஜே.கே.ஆரும் recessionம் மோதிக் கொ(ல்லும்)ள்ளும் காட்சி பெரும் பொருட்செலவில் உயர்ந்த கிராபிக்ஸ் தரத்தில் படமாக்கவும் முடிவுசெய்துள்ளார்களாம்.

ஜே.கே.ஆரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் அடுத்த பொங்கல் பரிசாக அமையும். மேலும் இந்தப் படத்திற்க்கு பொருத்தமான தலைப்பை ரசிகர்களே பரிந்துரைக்கலாமாம். சிறந்த தலைப்பு மன்றத்தின் மூலம் ஜே.கே.ஆரிடம் பரிந்துரைக்கப்பட்டு தக்க சன்மானம் வழங்கவும் முடிவாகியுள்ளது. ஆகவே சங்கத்து சிங்கங்கள் தங்களின் பொன்னான தலைப்பை அள்ளித்தெளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.