CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, December 24, 2008

மன்றத்து அறிவிப்பு.. பரிசை வென்றது யார்?

போன பதிவை படித்து Followers ஆனவர்களுக்கு சொன்னபடி ஆச்ச்ரியம் காத்திருக்கிறது. அது என்னெவென்பது தனிமடலில் தெரிவிக்கப்படும்.இன்னும் Followers ஆகாதவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஆகி விடுங்கள். பல பரிசுகளை வெல்லுங்கள். உலகம் அதிரப் போகும் சில விஷயங்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கிறது


ஆறு மாதங்களுக்கு முன்பே இந்தப் பதிவு எழுதிய அண்ணன் வால்பையன் அவர்கள் சங்க‌த்து செயலாள‌ராக நியமிக்கப் படிகிறார்.

**************************************

பல தடைகளையும்!! தாண்டி, பலத்த எதிர்பார்ப்புகளோடு, எதிரிகளின் மூஞ்சியில் கரியை பூசும் அளவுக்கு நமது தென்னக டாம் குரூஸ், ஒலகநாயகன் ரித்தீஷ் அவர்கள் நடித்த நாயகன் படம் ஈரோட்டில் வெளிவந்தது விட்டது, இனிவரும் அறுபது நாட்களுக்கு ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் வாங்கி விட்டதால் அதுவரை படம் பார்க்க இயலாத நிலையில் இருக்கிறேன். மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது, அந்த கஷ்டத்தை போக்கும் வகையில் நேற்று தொலைக்காட்சியில் தலைவர் படத்திலிருந்து ஒரு பாடல் ஒளிபரப்பப் பட்டது.

பல முன்னணி நடிகர்கள் கூட செய்திராத வகையில் ஒரு பாடலுக்கே, ஒரு முழு படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் செய்து அசத்தியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமான ஒன்று, அந்த ஒரு பாடலிலேயே தலைவர் பல கெட்டப்பில் வந்து தசாவதாரத்தின் சாதனையை முறியடித்தார்.

இந்த ஒரு பாடலுக்கு பதில் சொல்லுமா, வெளி வந்த, வெளிவர போகிற படங்கள் என்பது சந்தேகமே! நடிக்கும் இரண்டாவது படத்திலேயே நடனத்தில் பல புதுமைகளை புகுத்தி பார்பவர்களின் கால்கள் மட்டுமில்லாமல் "அது" "இது" என்று எல்லாவற்றையும் ஆட வைத்திருக்கிறார்.
வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நடிகர்களே, தம்மை பற்றி தாமே புகழ்ந்து பாடி கொண்டிருக்கும் இந்த அரசியல் உலகில், "நான் கக்கூஸ் போனா உனக்கென்ன"
"நீயும் நானும் மாமன் மச்சாண்டா" போன்ற தம்மை முன்னிறுத்தும் வார்த்தைகள் இல்லாமல், சமத்துவத்தையும், கல்வியின் தேவை மற்றும் அதை தீர்க்கும் வழியையும் இரண்டு வரிகளில் சொன்ன நமது தலைவர் இனி எல்லா நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனம் தான்.

அந்த வரிகள்
இருந்தாக்கா அள்ளிக்கொடு,
தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு,

இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடு என்றும், கற்ற கல்வியை கல்லாதவர்களுக்கு சொல்லிக்கொடு என்றும் சமுதாயத்தின் தற்போதைய தேவையை தமது பாட்டின் மூலமாக கொண்டிருப்பது, தலைவரின் சேவை உணர்ச்சியை எடுத்து காட்டுகிறது.

எங்கள் தலைவர் படத்தை நாங்கள் ஓட்டிவிடுவோம்
(தியேட்டரை விட்டு அல்ல, தியேட்டருக்குள்)
ஆனால் மற்ற ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்.

********************************************************************************

மேலும் போன பதிவை படித்து Followers ஆனவர்களுக்கு சொன்னபடி ஆச்ச்ரியம் காத்திருக்கிறது. அது என்னெவென்பது தனிமடலில் தெரிவிக்கப்படும்.இன்னும் Followers ஆகாதவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஆகி விடுங்கள். பல பரிசுகளை வெல்லுங்கள். உலகம் அதிரப் போகும் சில விஷயங்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கிறது

அனைவருக்கும் ஜே.கே.ஆர் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

Tuesday, December 23, 2008

Its serious. not a joke

சங்கத்து சிங்கங்களே,

இதுவரை 11 பேர் நம் Followers சங்கத்தில் ஆகி இருக்கிறார்கள். வருகிற ஞாயிற்றுக் கிழமைக்குள் followers ஆகிறவர்களுக்கு நம் சங்கத்தில் Golden member அந்தஸ்து கிடைக்கும். இதை வைத்து என்ன செய்யலாம் என்பது சஸ்பென்ஸ். ஆனால் இந்த வாய்ப்பை தவறவிடுகிறவர்கள் அடுத்த வாரம் அய்யோ மிஸ் பண்ணிட்டோமே என்று வருந்தப் போவது மட்டும் நிச்சயம்.

இன்னும் சில நாட்களில் நம் சங்கம் தலைப்பு செய்திகளில் அடிபட போவது மட்டும் உண்மை. இப்பொதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.

வீரத்தளபதியின் வள்ளல் குணம் நாம் அறிந்ததே.அதை குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் சங்கத்தில் பதவி கேட்பவர்கள் இதற்கு முன்னர் தாங்கள் ஜே.கே.ஆரைப் பற்றி எழுதிய பதிவின் லின்க்கோடு மெய்ல் அனுப்பலாம். பரிசீலிக்கப்படும்.

முந்துங்கள். வரும் ஞாயிற்றுக் கிழமை வரை மட்டுமே..

Wednesday, December 17, 2008

ஜே.கே.ஆர் - புகழ் பாடல்

வலையை மேய்ந்த போது பரவலாக என் கண்னில் படுவது வீரத்தளபதியை போற்றி எழுதும் பதிவுகள் தான். அவற்றில் ஒன்றுதான் இது. இதை எழுதியவரின் வலைப்பூ முகவரி http://enthanvaanam.blogspot.com. ஆனால் அவரின் தளத்தில் அவர் பெயர் கூட இல்லை. ஜே.கே.ஆரின் ரசிகர் என்பதால் இளங்சிங்கம் என்பது போன்ற பெயராகத்தான் இருக்க முடியும். அவர் எழுதிய பாடல் இதொ.(கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்)ஜெயிக்கிறாரு ஜெயிக்கிறாரு ஜே.கே.ஆரு
அண்ணன் யாரு அண்ணன் யாரு கேட்டுப் பாரு
அண்ணந்தானே முறுக்குமீசை எம்.ஜி.ஆரு
தோக்காத தோக்காத கஜினி பாரு
உளராத உளராத ரஜினி பாரு

அண்ணன் படத்த பாத்து பாத்து சிரிக்கும் குழந்தை பாரு
கண்ணு ரெண்டில் கண்ணு ரெண்டில் சூரியன் பாரு


நடந்து வந்தா நடந்து வந்தா நைலு ரிவரு
எழுந்து நின்னா எழுந்து நின்னா ஈபில் டவரு

உக்காந்தா உக்காந்தா சீனாச் சுவரு
தானத்துல தானத்துல கர்ணன் பாரு

தர்மத்துல தர்மத்துல மனுநீதிச் சோழன் பாரு
பேச்சுலதான் பேச்சுலதான் சின்ன கலைஞர் பாரு

படிப்புலதான் படிப்புலதான் சிவில் இஞ்சினியர் பாரு
நகைச்சுவையில் நகைச்சுவையில் கலைவாணர் பாரு
நடிப்புலதான் நடிப்புலதான் அண்ணன் சிவாஜி சாரு
மனசுலதான் மனசுலதான் தலைவர் நம்பியாரு

ஆட்டோவுல ஆட்டோவுல போஸ்டரு பாரு
அரசியல்ல அரசியல்ல கிங் மேக்கர் பாரு

ஜெயிக்கிறாரு ஜெயிக்கிறாரு ஜே.கே.ஆரு
அண்ணன் யாரு யாரு கேட்டுப்பாரு
அண்ணந்தானே முறுக்குமீசை எம்.ஜி.ஆரு
தோக்காத தோக்காத கஜினி பாரு
உளராத உளராத ரஜினி பாரு

அண்ணன்தான் தமிழ்நாட்டின் ப்யூச்சரு பாரு
அண்ணன்தான் தமிழ்நாட்டின் ப்யூச்சரு பாரு

இதப் புரிஞ்சுக்காட்டி புரிஞ்சுக்காட்டி டேஞ்சரு பாரு
இதப் புரிஞ்சுக்காட்டி புரிஞ்சுக்காட்டி டேஞ்சரு பாரு

Saturday, December 13, 2008

வாழ்க்கையில் செய்த பாவம் தொலைய இதை சொல்லுங்கள்

எனக்கு தெரிஞ்ச ஒருவர் தலைவலிக்கும் முதுகுவலிக்கும் ஒரு வைத்தியம் சொன்னார். அதை என் நண்பன் ஒருவனிடம் சொன்னேன். அப்படி செய்த அவனுக்கு தலைவலி சுத்தமாக போய்விட்டதாக கூறினான். அதைக் கேட்ட இன்னொரு நண்பன் அவனுக்கும் அந்த வைத்திய முறையை சொல்லுமாறு வந்தான். அவனிடம் பேசியது அப்படியே இதோ...

மச்சி, உனக்கு ஏதோ வைத்தியம் தெரியுமாமே? எனக்கு தலைவலி உயிர் போதுடா... ஏதாவது செய்..

வேணாம் சாமீ.. நான் சொன்னதுக்கு அப்புறம் என்ன அடிக்க வருவ..

டேய், உன் வைத்தியம் வொர்க் அவுட் ஆவுதுனு பாலாஜி சொன்னான்.. ப்ளீஸ் மச்சி.. தாங்க முடியல...

காலைல, அஞ்சு மணிக்கு எழுந்திருக்கணும்? பரவாயில்லையா?

இந்த வலியால நான் தூங்கறதே இல்ல... நீ மேல சொல்லு

அஞ்சு மணிக்கு எழுந்த உடனே...

பல் தேய்க்கணுமா?

அவ்ளோ கஷ்டபடதேவயில்ல... எதுவும் செய்ய கூடாதுனு சொல்ல வந்தேன்... எழுந்து‌ அப்ப‌டியே க‌ட்டிலே நின்னு க‌ண்ணு ரெண்டையும் மூடிக்கிட்டு ,ஒரு கைய‌ நெஞ்சு மேல‌ வ‌ச்சிக்கிட்டு இன்னொரு கைய‌ த‌லைக்கு மேல‌ தூக்க‌ணும்.

டேய் என்ன‌ க‌லாய்க்கிறியா?

இதுக்குதான் நான் சொல்ல‌ மாட்டேனு சொன்னேன். போடா போ இந்த‌ த‌லைவ‌லியோடு ஏக‌ன் போய் பாரு..

அப்புற‌ம் நீ சொல்ற‌த‌ கேட்டா அப்ப‌டித்தான் இருக்கு.. கோச்சிக்காம‌ மேல‌ சொல்லு...

இப்ப‌டி நின்னுக்கிட்டு எந்த இடம் வலிக்குதோ அந்த இடத்த மனுசுல நினைச்சிக்கிட்டு இந்த‌ ம‌ந்திர‌த்த‌ சொன்னா வ‌லி சும்மா ச‌த்ய‌ம் விஷால் மாதிரி ப‌ற‌ந்து போயிடும்..

ச‌ரி, அந்த மந்திரத்த சொல்லு...யார்க்கிட்டேயும் சொல்ல‌க்கூடாதா?

சொல்றேன்டா.. இதுல என்ன ரகசியம்.. இத நீ யார்கிட்ட வேணா சொல்லலாம்.. எத்தணை பேர் கிட்ட நீ சொல்றீயோ அவ்ளோ நல்லது..

அட‌, அப்ப‌டியா? த‌லைவ‌லி நின்னா போதும்..

ம்ம்ம்... ச‌ரி,ரொம்ப‌ மொக்க‌ போடுறேன்.. மந்திர‌த்த‌ சொல்றேன்..


வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க...முகவை மைந்தன் மென்மேலும் வளர்க.

Thursday, December 11, 2008

வலையுலகத்தை கலக்க வரும் சிங்கங்கள்

வலையுலக பெரியோர்களே, தாய்மார்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே,

அவ்வபோது தத்தம் பதிவிலே தள‌பதியின் புகழ்பாடி வந்த நாங்கள் இதோ சொந்தமாக ஒரு வலைப்பூவை உருவாக்கி இருக்கிறோம். எங்கள் சங்கத்தின் முக்கியமான நோக்கம், உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் அகிலாண்ட நாயகனின் ரசிகர்களை ஒன்று திரட்டுவதே. 2009ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் ஹிட்ஸும் நூறு உறுப்பினர்கள் சேர்ப்பதுமே எங்கள் லட்சியம். சங்கத்தில் சேர விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி jkrfanclub@gmail.com 

மன்றத்து நிர்வாகிகள்

தலைவர் ராப்
துணைத்தலைவர் ச்சின்னப்பையன்
பொருளாளர் புதுகை.அப்துல்லா
கொள்கை.ப.செயலாளர் வித்யா 
சிங்கை மன்ற தலைவர் ஜோஸப் பால்ராஜ் 
போர்படை தள‌பதி கார்க்கி

மறக்காமல் உங்கள் வருகையை பின்னூட்டம் மூலம் பதிவு செய்யுங்கள். ஆச்சரியமூட்டும் பல பரிசுகள் காத்திருக்கின்றன.

Wednesday, December 10, 2008

ஜே.கே.ரித்திஷை வாழ்த்துகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி

வீரத்தளபதியின் நாயகன் வெற்றி விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ர‌ஜினி வருவார் என கோடம்பாக்கம் பட்சி சொல்லுகிறது. அவர் வந்தால் என்ன பேசுவார் என்று ஒரு சிறு கற்பனை.

************************************************ 

"தமிழக முதல்வருக்கும், மேடையில் உள்ள மற்ற பெரிய மனிதர்களுக்கும் , விழா நாயகன் வீரத்தளபதி ரித்தீஷ் அவர்களுக்கும் வருகை தந்துள்ள அனைவருக்கும் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் ரசிக பெருமக்களுக்கும் நன்றி.


இந்த விழாவிற்கு என்னை அழைச்சப்ப நான் போலாமா வேணாமானு யோசிச்சேன். வரலைனா என்ன ஆகும், ரித்தீஷ் சூப்பர்ஸ்டார் ஆகிறது எனக்கு பிடிக்கலனு எழுதுவாங்க.அது தப்பு. வந்தா, இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு நான் ஒத்துகிட்டதா எழுதுவாங்க. என்னடா செய்யலாம் யோசிச்சப்பதான் தோணிச்சு. வரேனு சொல்லிட்டேன். அப்ப எனக்கு சில பேரு ஃபோன் பண்ணி நீங்க போனா அவரு பெரிய ஆளு ஆயிடுவாரு.அதனால் போவாதீங்கனு சொன்னங்க.அதுக்கு நான் சொன்னேன், நான் போய் தான் ஜே.கே.ஆர் பெரிய ஆள் ஆகனும்னு இல்ல. அவரு நல்ல மனுசுக்கு நான் போய்த்தான் ஆகனும்னு. சரிதானே? (ஆமாம் என்று கத்துகிறார்கள் ராப்,ச்சின்னப்பயன்,அப்துல்லா,பால்ராஜ் மற்ற சங்கத்து சிங்கங்கள்)


ஒரு சின்னக் கதை சொல்றேன். எல்லாக் கல்யாணத்திலும் ஒரு கொம்பு ஒன்னு நடுவாங்க. நல்லா உயரமா இருக்கும். அது ஆடாம இருக்கனும். அப்படி ஆடுச்சினா தலை மேல அடிப்பாங்க. அது ஆட அடி அடி விழுந்துட்டே இருக்கும். எப்போ ஆடுறத நிறுத்துதோ அப்பதான் அடி விழுறுது நிக்கும். நான் அஜித்த பத்தி சொல்லல. ஆனா நம்ம ரித்தீஷ் ஆடுறத பாத்துக்கிட்டே இருக்கலாம். " நிலா நிலா ஓடி வா" தான் இப்போ குழந்தைகளுக்கு புடிச்ச பாட்டு. ஆண‌வத்துல ஆடினாத்தான் அடி விழும். இது ஆனந்தத்துல ஆடுறது.


என் படத்துல ஒரு பாட்டு வரும் "சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா" . இந்தக் காலத்து குழந்தைகள் கிட்ட கேட்டா ரித்திஷ்னு தான் சொல்லும். கானல் நீர் முகவைல மட்டும்தான் 100 நாள் ஓடிச்சு. நாயகன் எல்லா ஊரிலும் ஓடுது. இவர் இன்று போல் என்றும் வாழ்ந்து பல பேரை வாழ வைக்க வேண்டுமென எல்லாம் வல்ல பாபாஜியை கேட்டுக்கொள்கிறேன். ************************************************


பி.கு: அப்துல்லா பதிவில் நடந்த கும்மியில் பங்கேற்ற அனைத்து ஜே.கே.ஆர் ரசிகர்களுக்கும் நன்றி. நாயகன் 100 நாட்களை தான்டி ஒடும் நாடுகள் எவை என்ற தகவல் சீக்க்ரம் வெளியிடப்படும்.

ஜே.கே.ஆரின் இணையத்தளம்

வீரத்தளபதியின் ரசிகர்களுக்காக ஒரு தளம்... அதுவும் வலை அல்ல, இணையத்தளம்... நாயகனின் நடிகன்,அரசியல்,சமூக சேவை என‌ மூன்று முகத்தை பற்றிய தெளிவான விவரங்களோடு சும்மா பட்டய கிளப்புதுங்க... இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும் படிக்க போறதில்ல... போங்க, இங்கக்ளிக்கி தலைவர் தரிசனம் பாருங்க..

அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு

"வீரத்தளபதி" "அகிலாண்ட நாயகன்" அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம் இணையத்தில் வெகுசிறப்புற நடைபெற்று வாசகப் பெருமக்கள் அனைவரையும் (அவ்வப்போது) மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருவது அகில உலகமும் அறிந்த பழய மேட்டர். மன்றத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி வந்த அண்ணன் வழிப்போக்கனை பூச்சாண்டி( நம்ப ச்சின்னப்பையன் அல்ல) தூக்கிகிட்டு போய்டதால ஆள் காணாமப் போய்ட்டார். கொ.ப.செ. இல்லாமலேயே இத்தனை நாளும் மன்றம் வெகு சிறப்புற நடைபெற்றதென்றால் அதற்குக் காரணம் அண்ணன் மேல நாங்க கொண்ட கன்னாப்பின்னா காதல்தான் என்பதை மன்றம் விளக்கத் தேவையில்லை.


தற்போது புதிய கொள்கை(?) பரப்புச் செயலாளராக மன்றத்தின் மேலேயே குற்றம் சொன்ன அக்கா வித்யா அவர்கள் தலைவி ராப் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நியமிக்கப்படுகிறார். மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு தங்களின் எக்கச்சக்க ஆதரவை வழங்கி அவர் பணி சிறக்க ஒத்துழைக்குமாறு மன்றம் கேட்டுக் கொள்கிறது. (வேறு யாருக்கேனும் மன்றத்தில் பதவி தேவை எனில் கவரோடு தனியாக என்னை வந்து பார்க்குமாறு இரசியமாகவும் கேட்டுக்கொள்கிறேன்).
புதிய கொ.ப.சே வின் பணி சிறக்க மன்றம் வாழ்த்துகிறது :)
இப்படிக்கு,

ராப் - தலைவர்
ச்சின்னப் பையன் - துணைத் தலைவர்
அப்துல்லா - பொருளாளர்
கார்க்கி - மன்ற போர்ப் படைத் தளபதி