CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, December 24, 2008

மன்றத்து அறிவிப்பு.. பரிசை வென்றது யார்?

போன பதிவை படித்து Followers ஆனவர்களுக்கு சொன்னபடி ஆச்ச்ரியம் காத்திருக்கிறது. அது என்னெவென்பது தனிமடலில் தெரிவிக்கப்படும்.இன்னும் Followers ஆகாதவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஆகி விடுங்கள். பல பரிசுகளை வெல்லுங்கள். உலகம் அதிரப் போகும் சில விஷயங்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கிறது


ஆறு மாதங்களுக்கு முன்பே இந்தப் பதிவு எழுதிய அண்ணன் வால்பையன் அவர்கள் சங்க‌த்து செயலாள‌ராக நியமிக்கப் படிகிறார்.

**************************************

பல தடைகளையும்!! தாண்டி, பலத்த எதிர்பார்ப்புகளோடு, எதிரிகளின் மூஞ்சியில் கரியை பூசும் அளவுக்கு நமது தென்னக டாம் குரூஸ், ஒலகநாயகன் ரித்தீஷ் அவர்கள் நடித்த நாயகன் படம் ஈரோட்டில் வெளிவந்தது விட்டது, இனிவரும் அறுபது நாட்களுக்கு ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் வாங்கி விட்டதால் அதுவரை படம் பார்க்க இயலாத நிலையில் இருக்கிறேன். மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது, அந்த கஷ்டத்தை போக்கும் வகையில் நேற்று தொலைக்காட்சியில் தலைவர் படத்திலிருந்து ஒரு பாடல் ஒளிபரப்பப் பட்டது.

பல முன்னணி நடிகர்கள் கூட செய்திராத வகையில் ஒரு பாடலுக்கே, ஒரு முழு படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் செய்து அசத்தியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமான ஒன்று, அந்த ஒரு பாடலிலேயே தலைவர் பல கெட்டப்பில் வந்து தசாவதாரத்தின் சாதனையை முறியடித்தார்.

இந்த ஒரு பாடலுக்கு பதில் சொல்லுமா, வெளி வந்த, வெளிவர போகிற படங்கள் என்பது சந்தேகமே! நடிக்கும் இரண்டாவது படத்திலேயே நடனத்தில் பல புதுமைகளை புகுத்தி பார்பவர்களின் கால்கள் மட்டுமில்லாமல் "அது" "இது" என்று எல்லாவற்றையும் ஆட வைத்திருக்கிறார்.
வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நடிகர்களே, தம்மை பற்றி தாமே புகழ்ந்து பாடி கொண்டிருக்கும் இந்த அரசியல் உலகில், "நான் கக்கூஸ் போனா உனக்கென்ன"
"நீயும் நானும் மாமன் மச்சாண்டா" போன்ற தம்மை முன்னிறுத்தும் வார்த்தைகள் இல்லாமல், சமத்துவத்தையும், கல்வியின் தேவை மற்றும் அதை தீர்க்கும் வழியையும் இரண்டு வரிகளில் சொன்ன நமது தலைவர் இனி எல்லா நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனம் தான்.

அந்த வரிகள்
இருந்தாக்கா அள்ளிக்கொடு,
தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு,

இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடு என்றும், கற்ற கல்வியை கல்லாதவர்களுக்கு சொல்லிக்கொடு என்றும் சமுதாயத்தின் தற்போதைய தேவையை தமது பாட்டின் மூலமாக கொண்டிருப்பது, தலைவரின் சேவை உணர்ச்சியை எடுத்து காட்டுகிறது.

எங்கள் தலைவர் படத்தை நாங்கள் ஓட்டிவிடுவோம்
(தியேட்டரை விட்டு அல்ல, தியேட்டருக்குள்)
ஆனால் மற்ற ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்.

********************************************************************************

மேலும் போன பதிவை படித்து Followers ஆனவர்களுக்கு சொன்னபடி ஆச்ச்ரியம் காத்திருக்கிறது. அது என்னெவென்பது தனிமடலில் தெரிவிக்கப்படும்.இன்னும் Followers ஆகாதவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஆகி விடுங்கள். பல பரிசுகளை வெல்லுங்கள். உலகம் அதிரப் போகும் சில விஷயங்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கிறது

அனைவருக்கும் ஜே.கே.ஆர் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

33 comments:

வால்பையன் said...

அதிர்ச்சியும், சந்தோஷமும் கலந்து கட்டி அடிக்கிறது

வால்பையன் said...

என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை

வால்பையன் said...

கார்க்கி அண்ணே மற்ற மன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு தானே!

அதிரை ஜமால் said...

ஆஹா

வாழ்த்துக்கள்

ஷங்கர் Shankar said...

வாழ்த்துக்கள் வால்பையன்

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க ! வாழ்க !

அதிரை ஜமால் said...

\\, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்.\\

ஹையோ ஹையோ

நல்லா கனவு கானுங்க.

நல்ல கதை - ஹூம்ம்ம் ...

வால்பையன் said...

அடுத்த சந்திப்பில் இதை கொண்டாடுகிறோம்

ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...

உண்மையான ரசிகர்களுக்கு தக்க மரியாதை செய்வதை தான் தலைவரும் விரும்பிகிறார்.

மீன்டும் சொல்கிறோம், ஏற்கனவே தலயை பற்றி பதிவெழுதியவர்கள் அதற்கான லின்க்கோடு பின்னூட்டமிடுங்கள்..

வால்பையன் said...

ஜமால் இது வால்பையன் வலையில் ஆகஸ்ட் மாதமே எழுதபட்டது!

எதிர்கட்சிகளின் சதியால் மறைக்கபட்டிருந்தது,

போர்படை தளபதி கார்க்கியின் முயற்சியால் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது

வால்பையன் said...

இங்கே 10 ஆவதாக பின்னூட்டம் இடுவதில் பெருமையடைகிறேன்

செந்தழல் ரவி said...

அய்ரோப்யிய கண்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகி பொறுப்பை எனக்கு வழங்கவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

இல்லை என்றால் இண்டியன் எம்பசிக்கு எதிராக தீக்குளிப்பேன்...

அட்லீஸ்ட் சுவீடன் நாட்டின் நிர்வாகி பொறுப்பாவது குடுங்கடே...

தாமிரா said...

வால்பையனின் பதிவு கலக்கல்.! ஜேகேஆர் குறித்த பதிவுகள் அனைத்துமே கிண்டலுக்காக எழுதப்பட்டாலும் ஏதோ ஓர் ஸாப்ட் கார்னர் இருப்பது தெரிகிறது. நிஜத்தில் டுபாக்கூர் 'தலபதி'களுக்கு அவர் எவ்வளவோ தேவலாம். மீண்டும் மீண்டும் இந்த கருத்தை வலியுறுத்துவேன். வாழ்க தல..

தாமிரா said...

செந்தழலுக்கு ஏதாவது பதவி தரும்படி குழுவுக்கு சிபாரிசு செய்கிறேன்.

‍-‍ சங்கத்தின் மறைமுக ஓனர்.

Anonymous said...

ஆஹா அசத்துறிங்க

ஷங்கர் Shankar said...

நாளை நமது தலைவர் பத்தி முழுமையான தகவல்களுடன் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.

அதற்கு சங்கத்தின் அனுமதி வேண்டுகிறேன்

வால்பையன் said...

//ஜேகேஆர் குறித்த பதிவுகள் அனைத்துமே கிண்டலுக்காக எழுதப்பட்டாலும் ஏதோ ஓர் ஸாப்ட் கார்னர் இருப்பது தெரிகிறது.//

ஐய்யோ இது முழுக்க முழுக்க தலைவரை புகழும் நோக்கத்தில் தான் எழுதபட்டது, கிண்டல் எங்கேயும் இல்லை.

ஓனரே எங்கேயும் பத்த வச்சிட்டு போயிராதிங்க!

சீட்டு எப்பாடா காலியாக்கும்னு ஏகப்பட்ட கழுகுகள் சுத்திகிட்டு இருக்கு

செந்தழல் ரவி said...

///நாளை நமது தலைவர் பத்தி முழுமையான தகவல்களுடன் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.///

கட்டிவிட்டு வா என்றால் வெட்டிவிட்டு வா என்பான் என் தலைவன் ஜேகேஆர்.

தலைவனின் புகழ்பாடும் வானம்பாடி ஆவதற்கு பர்மிஷன் ஏன் கேட்டுக்கிட்டு ?

ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...

விரைவில் செந்தழல் ரவிக்கு உய்ர்ந்த பதவி தரப்படும்..

PoornimaSaran said...

வாலுக்கு வாழ்த்துக்கள்

PoornimaSaran said...

me the 20

தாரணி பிரியா said...

வாழ்த்துகள் வால்பையன் சார்

ஆமா ரீடர்ல போட்டு படிக்கறவங்களை எல்லாம் ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டிங்களா ?

செந்தழல் ரவி said...

இந்த சின்ன வானம்பாடி தலையின் புகழ் பாடிய சுட்டியை மன்றத்து தங்கங்களின் பார்வைக்கு வைக்கிறேன்...

http://tvpravi.blogspot.com/2008/12/blog-post_5226.html

செந்தழல் ரவி said...

அய்யோ மறந்துட்டேன்...

வாழ்க ஜெ.கே.ஆர். வீழ்க வ.வா.சங்க திம்மிகள் மற்றும் மூதல் அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின்,ரஜினி,விஜியகோந்து மற்றும் டாக்டர் விஜய்...

Anonymous said...

புதுப்பதவி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஷங்கர் Shankar said...

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் வரலாறை பதிவாக போட்டு இருக்கிறேன் .
அனைத்து மன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் அவசியம் படித்து பின்னூட்டம் இட வேண்டும்
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க்கை வரலாறு

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க! வாழ்க!

செந்தழல் ரவி said...

http://jkritheesh.blogspot.com

இவர் ஏன் தனி ஆவர்த்தனம் வாசிக்கறாரு ??

தலக்கிட்ட ஏதும் பெட்டிவாங்கிட்டாரா ?

blue_krish said...

Vazhga Thalapathy

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

Anonymous said...

thalaivarai patthi eludunaa ungalukku engal sangatthin muluaataravu valangappadum.

தமிழ். சரவணன் said...

இவர் திரைப்படங்களும் பொது தொண்டுகளும் தொடர வாழ்த்துக்கள்

நிலா பிரியன் said...

Focus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க
http://www.focuslanka.com