CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, January 20, 2010

ஜே.கே.ஆர்.MP நடிக்கும் ராஜ்ஜியத்தில் ஒருவன்..(லாஜிக்குடன்)..!

நாயகன், பரபரஅரசியல் அவதாரம், கடகட எம்.பி அரிதாரத்திற்குப் பின், ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட்த்தைப் பார்ர்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி, தன் மன்ற நிர்வாகிகளோடு நம் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்.எம்.பி. அவர்கள் அவருடைய அடுத்த திரைப்படம் குறித்து பெலிடா நாசிகண்டர் மலேசியன் ரெஸ்ட்ராண்டில் கலந்தாலோசிக்கிறார்.

போர்ப்படைத் தளபதி.கார்க்கி,செயலாளர்.வால்பையன்,தேர்தல் பொறுப்பாளர்.ராஜூ ஆகியோர் ஆஜர்.

JKR: என்ன பாஸ், எல்லாரும் சௌக்கியமா..?

அனைவரும் கோரஸாக, ”சௌக்கியம் தளபதி” என்று கத்திய கத்தல் விண்ணைக் கந்தலாக்கியதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா உடன்பிறப்புகளே..!

JKR: இன்னிக்கு டக் ஆஃப் த டவுனே ஆயிரத்தில் ஒருவன் தானே.! ஆக்சுவலி நானும் அந்த மாதிரி ஒரு ப்ராஜக்ட் பண்றதுக்கு ஆசைப்படுறேன். அதுக்கு, என்னோட நலவிரும்பிகளான(?) உங்களோடு ஆலோசிக்கனும்ன்னு ஆசைப்படுறேன். டெல் மீ யுவர் தாட்ஸ்.

கார்க்கி: அதெல்லாம் ஒன்னும் வேணாம் தலைவரே..! அந்த பட்த்துல் லாஜிக்கே இல்ல. கல்லத் தள்ளி வுடுறானுக. கப்பல்ல போறானுக. ஹெலிகாப்டர் வருது. கத்திச்சண்டை போடுறானுக. ஒரே இம்சைப்பா.

JKR: நீங்க என்ன பாஸ் இப்புடி சொல்லீட்டீங்க...? எல்லாரும் செத்து மடியற ரேஞ்சுக்கு சிலாகிச்சுட்டுருக்காங்களேய்யா..?

ராஜு: ஆனா, தல எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது.

வால்பையன் திவிரமாக எதனையோ யோசித்துக்கோண்டேயிருக்க, JKR அவரை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.

கார்க்கி: அதெல்லாம் வேணாம் தல. ராஜூவுக்கு புடிச்சிருந்தா படத்துல லாஜிக் இருக்குனு அர்த்தமில்லை. அதனால நம்ம வீரபாண்டிய கட்டபொம்மனை இயக்குனர் பீரங்கி “பேரரசு”க்கிட்ட சொல்லி ரீமேக் பண்ணீரலாம்.கவலப்படாதீங்க..! மியூஸிக்கு ரகுமான்கிட்ட சொல்லி ஒரு குறுந்தொகையை ரீமிக்ஸ் பண்ணிடலாம்.
பலே வெள்ளையத்தேவா..!

ராஜு: ஆனா, தல எனக்கு படம் மிகவும் பிடித்திருந்த்து.

JKR: நீ என்னாய்யா கீழ விழுந்து கீறல் வந்த ரெக்கார்டு மாதிரி ஒரே டயலாக்கயே உளறிட்டு இருக்கேயாயா..? என்னா மேட்டரு..?

ராஜூ, கீழே குனிந்து எதயோ தேடுவது போல, தேடுகின்றார். ( ஃபீல் பண்றாராம்மாம்)

கார்க்கி: ஓய்..ஒய்ய்...(விசிலடிக்கிறார்)

JKR, கார்க்கியை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு, மீண்டும் வால்பையன் யோசித்துக் கொண்டேயிருப்பதைப் பார்த்து டரியலாகிறார்.

ராஜு: தல, ஒன்னுமேயில்லை.ஒருவன்னு முடியுற எல்லா படமும் சர்ச்சைய உண்டுபண்ணி வெற்றியடைஞ்சுரும்னு கண்ணான்னு ஒருத்தரு சொன்னாரு. அதுனால உங்க பட்த்துக்கு பூஜ்ஜி..ச்சே..”ராஜ்ஜியத்தில் ஒருவன்”னு பேர் வச்சிரலாம் தல. இசையருவில நீங்க வந்து லைவ்ல பேசுங்க. அப்படியே கலைஞரையும் போன் பண்ணச் சொல்லீட்டா
சும்மா அதிரமுல்ல..?

JKR: அய், இந்த மேட்டர் நல்லாருக்கே, கதையச் சொல்லுய்யா..! ஸ்கிரிப்ட் சொல்லு..!

ராஜு: ஸ்கிரிப்ட் எல்லாம் எதுக்கு தலைவரே, ஒரே ஒரு ஒன்லைனர் இருந்தா சூட்டிங் போயிரலாமே..!

வால்பையன் மட்டும் இன்னும் யோசித்தபடியே, நிலைகுத்திய கண்களுடன்...

கார்க்கி: தல, இந்த ராஜுன்றவனோட பேச்சை நம்பாதீங்க.கவுத்தீருவான். ஸ்கிரிப்ட் முழுசா ரெடி பண்ணிட்டுதான் சூட்டிங் போகனும்ன்றதுதான் டைரக்‌ஷன்ல பால பாடம். இப்பிடித்தான் ஜேம்ஸ்கேமரூன் 96% பட்த்த முடிச்சார்.

JKR: அது யாருங்க பாஸ்..? ஜூஸ் கம்ர்க்கட்டு..?

கார்க்கி தலையடித்துக் கொள்கிறார்.

ராஜு: கார்க்கிண்ணா, பாலா படமா இருந்தா என்ன..? அமீர் படமா இருந்தா என்ன..? நம்ம செல்வராகவன் படத்த்தானே உல்டா பண்ணப் போறோம். பாலாவையெல்லாம் ஏன் இழுக்குறீங்க..?

கார்க்கி மீண்டும் அஜித்திலடித்துக் கொள்கிறார்.

JKR “இது தேவையா..?” என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு மூவரையும் வெறித்துப்பார்க்கிறார்.
இவ்வளவு களேபரத்திலும் வால்பையன் மட்டும் யோசித்துக் கொண்டேயிருக்கிறார். JKR அவரைத் தோளில் தட்டி, “என்ன” என்பது போல் பார்க்கிறார். இனி வால்ஸ் மியூசிக் ஸ்டார்ஸ்...!

வால்பையன்: தலைவரே, இந்த படத்த நம்ம கொஞ்சம் பகுத்தறிவோட அணுகினோம்ன்னா, சண்டைக்கு காரணமே பாண்டிய குடும்பத்தின் குலதெயவச்சிலைதான்.ஆக, கடவுள்ன்னு ஒருத்தர் வந்தாலே பிரச்சனைதான்னு டைரக்டர் மறைமுகமா சொல்லவர்றார். அதுனால, இது அப்பட்டமான ஒரு அக்மார்க் ஆன்மீகப்படம். இது என்னோட பார்வை மட்டுமே..!

JKR: என்ன பாஸ் உங்க பார்வை பெரிய கொலைவெறிப்பார்வையா இருக்கே..!

வால்பையன் ஒரு சிறிய புன்முறுவலோடு, தன் நண்பர் ஒருவருக்கு போன் செய்து, ஜே.கே.ஆருடன் பேசும்படிச் சொல்லித் தருகின்றார்.

கார்க்கியும் ராஜுவும் முழித்துக் கொண்டே,ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.

அந்த போன் ஆசாமியுடன் பேச்சு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, ”ஆணியே புடுங்க வேணாம் சாமி..” ரேஞ்சுக்கு எகிறி, ரெஸ்ட்டாரண்டின் ஒருபகுதி இருட்டில் எகிறி ஓடி மறைகின்றார் JKR.

பிறகு,வால்பையன் சொல்லித்தான் அந்த போன் ஆசாமி கும்க்கி எனவும் அவர் ஜே.கே.ஆருடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிப் பேசியுள்ளார் என்பதும் கார்க்கிக்கும் ராஜுவுக்கும் தெரியும்.

உரிமைதுறப்பான்: நிகழ்வில் வரும் சம்பவங்களும் பெயர்களும் 100% கற்பனையே..!

Next மீட் பண்ணுவோம்
♠ராஜூ♠

Friday, August 21, 2009

மோட்சம் அடைய எளிய வழி, (வலியுடன்).

வாழ்க ஜே.கே.ஆர்.எம்.பி..!. வள‌ர்க அவர்தம் புகழ்..!

அன்புடையீர்,
உபயகுச்சலோபரி.நிகழும் மங்களகரமான் விரோதி வருடம், ஆவணி மாதம், 12ம் நாளும் புனித ரமலான் மாதம் 7ம் நாளும் ஆகஸ்ட் மாதம் 28ம் நாளுமான‌ வெள்ளிக்கிழமையன்று ஏதோ ஒரு நட்சத்திரமும் ஒரு கெரகமும் மரணயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், மாலை 7.30 மணிக்குமேல் 7.31 மணிக்குள் ஏதோ ஒரு லக்கினத்தில், இடைத் தேர்தலில் எங்கள் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், கலைஞர் தொலைக்காட்சியில்,பதிவுலக பட்டிஷ்டா,தமிழக விடிவெள்ளி,முகவையின் முத்து,ந‌ம் வலையுலக சொத்து,சின்னப் பகவதி, சிங்காரத் தமிழன், அண்ணன்
ஜே.கே.ஆர்.எம்.பி. அவர்கள் நடித்த சூப்பர் டூப்பர் மெகா ஹிட் திரைப்படமான "நாயகன்"(THE REAL HERO) திரைப்படம் திரையிட இருப்பதால், தாங்கள் தங்கள் சுற்றம் சூழ, டிவி முன்பு அமர்ந்து வெள்ளிக்கிழமையன்று கலைஞர் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிறச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படத்தைப் பார்த்து பிறவிப்பயனையும் அடையலாம்.


தங்களன்புள்ள,

ஜே.கே.ஆர். எம்.பி.மன்ற நிர்வாகிகள்.
வலையுலகம்.

அவ்வண்ணமே கோரும்,
கலைஞர் தொலைக்காட்சி.
"கலை"யுலகம்.



(இரு வீட்டார் அழைப்பு.)



டிஸ்கி: இப்படத்தை 7.30 மணிக்கு திரையிடுவதில் எவ்வித உள்குத்து இல்லையென்று கலைஞர் டிவி,நமக்கு ஃபேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

Tuesday, July 21, 2009

ஜே.கே.ரித்திஷ் M.P. யிடம் பிடித்த 10.

* நாயகன் பட கிளைமெக்ஸுல மீன் தொட்டிய துப்பாக்கியால, கரெக்டா அந்த புல்லட்டோட டயாமீட்டர் அளவுக்கு ஒரு ஓட்டை போடுவீங்களே அது பிடிக்கும்.

* நீங்க துப்பாக்கி புடிக்கிற அழகுக்காகவே நாயகன் படத்தை நூறுதடவை பார்க்கலாம்.

* ஆட்டோ டிரைவர்ல இருந்து ஆளுநர் வரைக்கும் அள்ளி அள்ளிக் குடுப்பீங்களே,அது பிடிக்கும்.

* கானல் நீர் படத்து டிரையிலர்ல இன்ட்ரோ சீன்ல அப்ப்டியே பேன்ட் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு ஸ்டைலா நடந்து வருவீங்களே, அத பிடிக்காதவன் எவனாச்சும் இருக்க முடியுமா..

* யாரோ ஒரு பிரபல அரசியல் தலைவரிடம் "அமைச்சர் பதவிக்கி எவ்ளோ செலவாகும்..?"ன்னு நீங்க கேட்டீங்களாமே.
அந்த அப்பாவித்தனம் உஙகளத் தவிர வேற யாருக்கு வரும் தலைவா..?

* நீங்க நாயகன் படத்துல, சங்கீதாவ காப்பத்துற அந்த அலட்டலில்லாத நடிப்புக்காக எத்தனை தடவை வேணும்ன்னாலும், யாரு வேணும்ன்னாலும் சங்கீதாவக் கடத்திட்டுப் போகலாம்.

* உங்களோட அரசியல் போஸ்டருக்கு நீங்க அனுமதிச்சு ரசிச்சு போடுற வசனத்துக்கே, நாங்களெல்லாம் அடிமை தலைவரே. மறக்க முடியுமா அந்த "வடபழனி வாக்காளப் பெருமக்களை".

* படத்துல நடிக்கிற அந்த கேரக்டராவே மாறுற திறமையும் அழகும் உங்களத் தவிர வேற யாருக்கு வரும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்..ஸாரி..ஸாரி..கேப்போம்.

* என்னாதான் எல்லாரும் ஓட்டுனாலும் தைரியமா "வேட்டைப்புலி" வேலைகளப் பாத்துக்குட்டி இருக்கீங்களே, அந்த அசாத்திய தைரியம் பிடிக்கும்.

* பத்தாவதா நிறைய வருது. உங்களோட காஸ்ட்யூம் , உங்க ஹுயூமர் சென்ஸ், அரசியல் நடவடிக்கைகள்ன்னு எல்லாமே பிடிக்கும் தலைவரே.

வாழ்க தமிழ்... வளர்க ஜே.கே.ஆர்.M.P.புகழ்...!

என்றென்றும் உங்கள் வழியில் டக்ளஸ்...

Saturday, July 11, 2009

யாருடா அது ஆன்டர்சன்னு...!

யாரோ சாம் ஆன்டர்சன்னாம், ஜீ டிவியாம், அதுல இன்னைக்கு நைட்டு அந்தாளு நடிச்ச, யாரோ யாரோடி, (ஸ்டெப்னீ)படம் போடுறாங்களாம்.போடட்டும்.தப்பில்லை. ஆனா, அந்தாளை எங்க அண்ணன் கூட‌ ஒப்பிட்டு, அடுத்த வீரத்தளபதி,வருங்கால முதல்வர்,வருங்கால அமெரிக்க‌ பிரதமர்ன்னு சொன்னீங்க.அவ்வளவுதான்,நாங்கல்லாம் "நாயகன்" படத்தையே கலைஞர் டி.வியில போட்டவிய்ங்க. எங்க அண்ணன் ஏதோ கொஞ்ச காலம் அரசியல், எம்.பி., பிரச்சாரம், பதவியேற்பு, மக்கள் குறை கேட்புன்னு பிஸியா இருந்தாக்கா, நீங்க என்னாடான்னா, அதுக்குள்ள புது ஆளை ஃபீல்டுல இறக்கப் பாக்குறீங்களா..? பிச்சு புடுவேன் பிச்சு. நாங்களும் ரெடியாயிட்டிதான்டி இருக்கோம். தயாரியிட்டு இருக்கு "வேட்டைப்புலி". அனுஷ்கா வேட்டைக்காரன்லயும் பாவனா அசல்லயும் பிஸியா இருக்குறதுனால் எங்க அண்ணனுக்கு சரியான ஜோடி இன்னும் அமையல. அதுக்குக்காகத்தான் வெயிட்டிங். மவனே, இன்னும் கொஞ்ச நாள்ல டரியலாகப் போறீங்க..!

எங்க அண்ணன் டெல்லி போயிட்டார்ல. அதனால‌ நாங்க பாலிவுட்லயும் கால் வைக்கப் போறோம். ஆமாப்பு.."வேட்டைப்புலி"ய "துஷ்மன்"ன்ற பேர்ல ஹிந்திலயும் டப்பிங் பண்ணி வெளியிடப் போறோம். பத்திக்கிச்சுடா பாலிவுட்டு. சும்மா ஷாரூக்கான், அமீர்கான்லாம் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடிப் போயிரணும் ஓடி.. இப்போ த்ரிஷாவும் பாலிவுட்டுக்கு போயிருக்குறதுனால அவங்களும் கதாநாயகி லிஸ்ட்ல இருக்காங்க என்பதையும் இங்கு தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.Of Course ஜெனீலியா also.

ரத்தம் கொதிக்கின்றது. நாங்கள் ஓபாமாவேயே எங்கள் அண்ண்னோடு ஒப்பிடுவதை எங்கள் புகழுக்கு இழுக்கு என கருதிக் கொண்டிருக்கின்றோம். இந் நேரத்தில் சாம் ஆன்டர்சன்னை எங்களோடு ஒப்பிடுவது எங்களுக்கு மன சங்கடத்தையே தருகின்றது.இப்பிடி அகிலத்தையே இன்னும் சிறிது காலத்தில் ஆட்டிப் படைக்கப் போகின்ற எங்கள் தன்னிகரற்ற தலைவனை "சாம் ஆனடர்சன்"னோடு ஒப்பிட்டு எங்கள் அண்ணனின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதை ஒருக்காலும் தாங்க மற்றும் அனுமதிக்க முடியாது என்பதை எங்கள் மாமன்றத்தின் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறோம்.இவை அனைத்தும் கட்டாயம் எதிர்கட்சிகளின் சதியாகத்தான் இருக்கும் என 48422655வது ஒன்றியக் குழு தெரிவித்துள்ளதாக அறிகின்றோம்.

என்னைக்குமே நாங்கதான்டா டாப்பு.
மத்தவனெலாம் டூப்பு.
வருது பாரு வேட்டைப்புலி.
வந்தா,மவனே நீ காலி..
எங்க அண்ணன்தாண்டா சிங்கம்.
தமிழ்நாட்டின் தங்கம்.
சீண்டிப் பாக்காத சிங்கத்த..
தாங்க முடியாது அதோட சீற்றத்த.
முடிஞ்சு போகும் ஓங்கத.
எதிர்த்து நிக்காத முன்னாடி.
அப்பறமா, ஃபீல் பண்ணுவ பின்னாடி.
இது சிங்கத்தோட கோட்டைடா.
தில் இருந்தா வால ஆட்டுடா.
வெட்டிடுவோம் ஒட்ட நறுக்கி.
தாங்கமாட்ட தளபதியோட வெறிக்கி.
அண்ணன் கண்ணசைசா,
கொதிக்கும்டா கோலிவுட்டு.
பத்துக்கிரும்டா பாலிவுட்டு.
அடுத்த டார்கெட்டு டோலிவுட்டு.
2020ல ஹாலிவுட்டு.
இப்போ இருக்குறது பார்லிமென்ட்டு.

எங்க தளபதி சிரிச்சா தென்றலு.
அடிச்சா புயலு.
புடிச்சா முயலு
கொதிச்சா ஆயிலு.
மவனே,பேசாம போயிரு.


இங்ஙணம்.
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் M.P. ரசிகர் மன்றம்.

Friday, May 15, 2009

வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா

jkr

     எங்க தல சிங்கம்டா…

 

  தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் தலைக்கு சீட் அறிவித்தவுடன் ஆ வென பிளந்த வாய்கள் தான் அனேகம். அவரின் மக்கள் செல்வாக்கு, அரசியல் அனுபவம், பொது சேவைகள் என எதுவும் தெரியாத தற்குறிகள் ஏதோ நாயகன் பட வெற்றிதான் அவருக்கு சீட் வாங்கித் தந்ததாக உளறினார்கள். பாஜகவின் திருநாவுக்கரசரை எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியுமா என்று சொன்னவர்களும் உண்டு.

இதோ எங்க சிங்கம் 3500 வாக்கள் முன்னிலையில் இருக்கிறது. பிராச்சர களத்தில் நாங்கள் குதித்த போது தலைமை எங்களுக்கிட்ட கட்டளை என்னத் தெரியுமா? இப்போதே அதிகம் பேச வேண்டாம். நம் வெற்றி பேசட்டும் என்றார்கள்.  இதொ கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி.

இது முடிவல்ல..

இது ஆரம்பம்.

இனிமேல் தான் பூகம்பம்….

Thursday, April 30, 2009

நாளைய வரலாற்றின் வாழ்த்து..!

வருங்கால் நிதியமைச்சர்..!
பதிவுலக பட்டிஷ்டா...!
தமிழக விடிவெள்ளி...!
அமெரிக்காவின் விடியாத வியாழன்..!
தன்மான கரடி..!
தேர்தல் சூறாவளி..!
முகவையின் முத்து..!
ந‌ம் வலையுலக சொத்து.!
ராமநாதபுரத்து மின்னல்..!
ஈடு இனையில்லா இடி..!
கலியுக வள்ளல்..!
சின்னப் பகவதி..!
சீறி வரு காளை..!
புரட்சி புறா..!
தன்னலமற்ற தலைவன்..!


நாளைய‌ தமிழக வரலாற்றை டெல்லியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் போகும் எங்கள் வீரத்தளபதி "ஜே.கே.ரித்திஷ்" சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...

இவண்
மன்ற நிர்வாகிகள்..

Sunday, April 12, 2009

தளபதியின் வாழ்த்து..!

நம்ம வீரத்தளபதி அண்ணன் "ஜே.கே.ரித்திஷ்" அவர்களின் அனல் பறக்கும் சூறாவளிப் பிரச்சாரம் இன்னும் சில‌ நாட்களில் இராமநாதபுரத்தில் தொடங்க உள்ளது.இராமநாதபுர மக்களே டரியலாகுங்கள்..ச்சே..தயாராகுங்கள். தளபதி அவர்கள் போஸ்டர்களுக்கு ஸ்டில் கொடுக்கும் வேலையில் ஒருகையில் துப்பாக்கியையும் ஒருகையில் வேட்டியையும் பிடித்தபடி பிஸியாக உள்ளார் என கழக உடன்பிறப்புகளும் கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.நம் வீரத்தளபதிக்கு ஆதரவாக,சில திரையுலக முண்ணனி(?) நட்சத்திரங்களும் பிரச்சாரத்தில் இறங்கப் போகின்றன.எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், எதிர்கட்சிகள் "தமிழ் புத்தாண்டு" என்ற ஒன்றை கொண்டு வந்து அண்ணனின் வெற்றியை தடுக்கப் பார்க்கின்றன.இருந்தாலும் அண்ணன் அவர்கள் தன் மன்ற நிர்வாகிகளின் மூலம் ரசிகர்களாகிய உங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இதோ அந்த செய்தி:



ம்ம்.. நாளை நமதே.. நாற்பதும் நமதே...ச்சே இராமநாதபுரமும் நமதே.

இவண்:
மன்ற நிர்வாகிகள்.