CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, July 21, 2009

ஜே.கே.ரித்திஷ் M.P. யிடம் பிடித்த 10.

* நாயகன் பட கிளைமெக்ஸுல மீன் தொட்டிய துப்பாக்கியால, கரெக்டா அந்த புல்லட்டோட டயாமீட்டர் அளவுக்கு ஒரு ஓட்டை போடுவீங்களே அது பிடிக்கும்.

* நீங்க துப்பாக்கி புடிக்கிற அழகுக்காகவே நாயகன் படத்தை நூறுதடவை பார்க்கலாம்.

* ஆட்டோ டிரைவர்ல இருந்து ஆளுநர் வரைக்கும் அள்ளி அள்ளிக் குடுப்பீங்களே,அது பிடிக்கும்.

* கானல் நீர் படத்து டிரையிலர்ல இன்ட்ரோ சீன்ல அப்ப்டியே பேன்ட் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு ஸ்டைலா நடந்து வருவீங்களே, அத பிடிக்காதவன் எவனாச்சும் இருக்க முடியுமா..

* யாரோ ஒரு பிரபல அரசியல் தலைவரிடம் "அமைச்சர் பதவிக்கி எவ்ளோ செலவாகும்..?"ன்னு நீங்க கேட்டீங்களாமே.
அந்த அப்பாவித்தனம் உஙகளத் தவிர வேற யாருக்கு வரும் தலைவா..?

* நீங்க நாயகன் படத்துல, சங்கீதாவ காப்பத்துற அந்த அலட்டலில்லாத நடிப்புக்காக எத்தனை தடவை வேணும்ன்னாலும், யாரு வேணும்ன்னாலும் சங்கீதாவக் கடத்திட்டுப் போகலாம்.

* உங்களோட அரசியல் போஸ்டருக்கு நீங்க அனுமதிச்சு ரசிச்சு போடுற வசனத்துக்கே, நாங்களெல்லாம் அடிமை தலைவரே. மறக்க முடியுமா அந்த "வடபழனி வாக்காளப் பெருமக்களை".

* படத்துல நடிக்கிற அந்த கேரக்டராவே மாறுற திறமையும் அழகும் உங்களத் தவிர வேற யாருக்கு வரும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்..ஸாரி..ஸாரி..கேப்போம்.

* என்னாதான் எல்லாரும் ஓட்டுனாலும் தைரியமா "வேட்டைப்புலி" வேலைகளப் பாத்துக்குட்டி இருக்கீங்களே, அந்த அசாத்திய தைரியம் பிடிக்கும்.

* பத்தாவதா நிறைய வருது. உங்களோட காஸ்ட்யூம் , உங்க ஹுயூமர் சென்ஸ், அரசியல் நடவடிக்கைகள்ன்னு எல்லாமே பிடிக்கும் தலைவரே.

வாழ்க தமிழ்... வளர்க ஜே.கே.ஆர்.M.P.புகழ்...!

என்றென்றும் உங்கள் வழியில் டக்ளஸ்...

11 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

ஹேய் டக்ளஸ் டாப் கிளாஸ்பா....

லோகு said...

இதுக்கு எதிர் பதிவு போடற தைரியம் யாருக்கும் இருக்காது மாப்ள.. சூப்பர்..
கலக்கிட்ட போ..

Karthik said...

ஹா..ஹா.

சீரியஸ் பதிவில் சிரிச்சதுக்கு மன்னிக்கவும். :)

டக்ளஸ்... said...

நன்றிங்கண்ணா...
:)

நம்ம யாரு வம்பு தும்புக்கு போறதில்ல லோகு..!

ரைட்டு கார்த்திக். தலைவர் உங்களை மன்னித்தருள்வாராக...!

வால்பையன் said...

/சங்கீதாவ காப்பத்துற அந்த அலட்டலில்லாத நடிப்புக்காக எத்தனை தடவை வேணும்ன்னாலும், யாரு வேணும்ன்னாலும் சங்கீதாவக் கடத்திட்டுப் போகலாம்.//

சங்கீதா கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தா நானே கடத்திட்டு வந்துருப்பேனே!

அதிலை said...

//* என்னாதான் எல்லாரும் ஓட்டுனாலும் தைரியமா "வேட்டைப்புலி" வேலைகளப் பாத்துக்குட்டி இருக்கீங்களே, அந்த அசாத்திய தைரியம் பிடிக்கும்.//
super..

clayhorse said...

நல்ல கிண்டல். இத உங்கத் தலைவருக்கு அனுப்பிப் பாருங்க. மன்றப் பொறுப்புக்கு மேல ஏதாவது கிடைத்தாலும் கிடைக்கும்.

பிரசன்னா இராசன் said...

தானைத் தலைவனுக்கு இப்பிடி ஒரு கிளப் இருக்குதா... என்னையும் சேர்த்துக்கோங்கப்பு... நானும் தலைவரைப் பத்தி ஒரு சூப்பர் பதிவு போட்டு இருக்கேன்...

பிரசன்னா இராசன் said...

என்னை யு.எஸ் நிர்வாகியா சேர்த்துக்கங்கப்பு... :D

ஆ.ஞானசேகரன் said...

பிடிக்கட்டும் பிடிக்கட்டும்...

சி.பி.செந்தில்குமார் said...

இப்படியும் ஒரு டைட்டிலில் பிளாக்கா?ஆச்சரியம்