CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, July 11, 2009

யாருடா அது ஆன்டர்சன்னு...!

யாரோ சாம் ஆன்டர்சன்னாம், ஜீ டிவியாம், அதுல இன்னைக்கு நைட்டு அந்தாளு நடிச்ச, யாரோ யாரோடி, (ஸ்டெப்னீ)படம் போடுறாங்களாம்.போடட்டும்.தப்பில்லை. ஆனா, அந்தாளை எங்க அண்ணன் கூட‌ ஒப்பிட்டு, அடுத்த வீரத்தளபதி,வருங்கால முதல்வர்,வருங்கால அமெரிக்க‌ பிரதமர்ன்னு சொன்னீங்க.அவ்வளவுதான்,நாங்கல்லாம் "நாயகன்" படத்தையே கலைஞர் டி.வியில போட்டவிய்ங்க. எங்க அண்ணன் ஏதோ கொஞ்ச காலம் அரசியல், எம்.பி., பிரச்சாரம், பதவியேற்பு, மக்கள் குறை கேட்புன்னு பிஸியா இருந்தாக்கா, நீங்க என்னாடான்னா, அதுக்குள்ள புது ஆளை ஃபீல்டுல இறக்கப் பாக்குறீங்களா..? பிச்சு புடுவேன் பிச்சு. நாங்களும் ரெடியாயிட்டிதான்டி இருக்கோம். தயாரியிட்டு இருக்கு "வேட்டைப்புலி". அனுஷ்கா வேட்டைக்காரன்லயும் பாவனா அசல்லயும் பிஸியா இருக்குறதுனால் எங்க அண்ணனுக்கு சரியான ஜோடி இன்னும் அமையல. அதுக்குக்காகத்தான் வெயிட்டிங். மவனே, இன்னும் கொஞ்ச நாள்ல டரியலாகப் போறீங்க..!

எங்க அண்ணன் டெல்லி போயிட்டார்ல. அதனால‌ நாங்க பாலிவுட்லயும் கால் வைக்கப் போறோம். ஆமாப்பு.."வேட்டைப்புலி"ய "துஷ்மன்"ன்ற பேர்ல ஹிந்திலயும் டப்பிங் பண்ணி வெளியிடப் போறோம். பத்திக்கிச்சுடா பாலிவுட்டு. சும்மா ஷாரூக்கான், அமீர்கான்லாம் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடிப் போயிரணும் ஓடி.. இப்போ த்ரிஷாவும் பாலிவுட்டுக்கு போயிருக்குறதுனால அவங்களும் கதாநாயகி லிஸ்ட்ல இருக்காங்க என்பதையும் இங்கு தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.Of Course ஜெனீலியா also.

ரத்தம் கொதிக்கின்றது. நாங்கள் ஓபாமாவேயே எங்கள் அண்ண்னோடு ஒப்பிடுவதை எங்கள் புகழுக்கு இழுக்கு என கருதிக் கொண்டிருக்கின்றோம். இந் நேரத்தில் சாம் ஆன்டர்சன்னை எங்களோடு ஒப்பிடுவது எங்களுக்கு மன சங்கடத்தையே தருகின்றது.இப்பிடி அகிலத்தையே இன்னும் சிறிது காலத்தில் ஆட்டிப் படைக்கப் போகின்ற எங்கள் தன்னிகரற்ற தலைவனை "சாம் ஆனடர்சன்"னோடு ஒப்பிட்டு எங்கள் அண்ணனின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதை ஒருக்காலும் தாங்க மற்றும் அனுமதிக்க முடியாது என்பதை எங்கள் மாமன்றத்தின் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறோம்.இவை அனைத்தும் கட்டாயம் எதிர்கட்சிகளின் சதியாகத்தான் இருக்கும் என 48422655வது ஒன்றியக் குழு தெரிவித்துள்ளதாக அறிகின்றோம்.

என்னைக்குமே நாங்கதான்டா டாப்பு.
மத்தவனெலாம் டூப்பு.
வருது பாரு வேட்டைப்புலி.
வந்தா,மவனே நீ காலி..
எங்க அண்ணன்தாண்டா சிங்கம்.
தமிழ்நாட்டின் தங்கம்.
சீண்டிப் பாக்காத சிங்கத்த..
தாங்க முடியாது அதோட சீற்றத்த.
முடிஞ்சு போகும் ஓங்கத.
எதிர்த்து நிக்காத முன்னாடி.
அப்பறமா, ஃபீல் பண்ணுவ பின்னாடி.
இது சிங்கத்தோட கோட்டைடா.
தில் இருந்தா வால ஆட்டுடா.
வெட்டிடுவோம் ஒட்ட நறுக்கி.
தாங்கமாட்ட தளபதியோட வெறிக்கி.
அண்ணன் கண்ணசைசா,
கொதிக்கும்டா கோலிவுட்டு.
பத்துக்கிரும்டா பாலிவுட்டு.
அடுத்த டார்கெட்டு டோலிவுட்டு.
2020ல ஹாலிவுட்டு.
இப்போ இருக்குறது பார்லிமென்ட்டு.

எங்க தளபதி சிரிச்சா தென்றலு.
அடிச்சா புயலு.
புடிச்சா முயலு
கொதிச்சா ஆயிலு.
மவனே,பேசாம போயிரு.


இங்ஙணம்.
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் M.P. ரசிகர் மன்றம்.

19 comments:

டக்ளஸ்....... said...

இது கடமை...!

மணிகண்டன் said...

காலங்கள் மாறும்.
விடிவு பிறக்கும்.
இன்று அந்த விடிவு.
பிரபஞ்ச நாயகன் சாம் ஆண்டர்சன் படமான யாருக்கு யாரோ பார்த்து மோட்சம் அடைவது நமது கடமை

குடந்தை அன்புமணி said...

ம்... நடத்துங்க... நடத்துங்க...

செந்தழல் ரவி said...

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.
அது முடியும் முன்னாலே பேச்சிருக்கும்..

ஜேகேஆர் அது ஜேகேஆர்...

லல லல லலல......

Saravanan Renganathan said...

டென்சன குறைங்க பாஸ் ..

இந்தியாவின் இமயத்தை தெரியாதனமா பரங்கி மலையோட compare பண்ணிபுட்டங்கிய பயபுள்ளக

அதிஷா said...

என்றுமே கலங்காத கடல் எங்கள் ஆண்டர்சன்..

அவரது புகழுக்கு பங்கம் வந்தால் கொதித்தெழுவோம் என்பதை

அகில பிரபஞ்ச சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

அதிஷா தலைமையில் அகில பிரபஞ்ச ஆண்டர்சன் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது என்பதையும், இனி எங்கள் தலைவரை மிஞ்ச எவனும் இந்த பூமியில் பிறக்கவுமில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை என்ற அரிய உண்மையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன் ஜேகேஆரை மிஞ்சும் அளவில் ஆண்டர்சன் இல்லை.. எப்போதோ விஷால், பரத், சிம்பு, விஜய், அஜித் எல்லோரும் மிஞ்சிவிட்டதால் அவர் நிம்மதியாக அரசியல் பணியை தொடரட்டும்.

எங்கள் ஆண்டர்சனை விஞ்ச விஷால், பரத், சிம்பு, விஜய், அஜித் போன்றோர் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்று நினைவுறுத்துகிறோம் மேலும் எப்படியும் அதையும் அவர்கள் சாதித்துக்காட்டுவார்கள் என்றும் நம்புகிறோம்.

அதிஷா said...

ஆதிமூலத்தின் பின்னூட்டத்தை வரிக்கு வரி வழிமொழிகிறேன்

மணிகண்டன் said...

அதிஷா தலைமையில் ரசிகர் மன்றம் அமைந்ததாலும், நான் நல்லவன் என்பதாலும் இந்த மன்றத்தில் இருந்து பிரிந்து பிரபஞ்ச நாயகனின் ரசிகர்கள் வாழ்க்கையை மக்கள் நற்பணிக்கு அர்பணிக்க வைப்பேன்.

வாழ்க சாம். வாழ்க அவர் நற்பணி மன்றம்.

தேவன் மாயம் said...

என்னவோ நடக்குது!!
நடத்துங்க!!

gonzalez said...

ritish is in parliment now. in parliment everybody wearing old dress over ritish looks like hero and even sonia madam asked chidambaram who that was.

more details

http://eradini.blogspot.com/

http://funny-indian-pics.blogspot.com/

pappu said...

நானும் எத்தனையோ தடவ சங்கத்துல பதவி கேட்டு [பாத்துட்டேன். பதிலே இல்ல. ஆனா, இப்போ உங்கள தோக்கடிக்க சிங்கம் களம் இறங்கிருச்ச்ச்ச்சேய்!

நண்பர்களுக்கு சாம், எதிரிகளுக்கு பாம்
- புலி வேட்டையை தொடரும் ஜெக வீர சிங்கம் சாம் ஆண்டர்சன்!

சூரியன் said...

நான் இந்த பதிவில் உள்ளதை அப்படியே ஏற்கிறேன்.

அதிஷா,ஆதிமூலம் அவர்களுக்கு என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னதான் அண்ணன் பாராளுமன்றத்தில் எங்களூக்காக் குரல் கொடுக்க சென்றாலும் ,மற்ற தமிழ் மக்களுக்கு சேவை இல்ல இல்ல அதிர்ச்சி கொடுக்க வருவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..

Anonymous said...

நான் நிசமா தான் சொல்றேன். ஜெ கே ஆர் ஒரு பொறுப்பான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியா நல்லா தான் நடிச்சிருந்தார். சாம் ஆண்டெர்சன் ஒரு லூசு.

சத்ரியன் said...

ஏற்கனவே 104 டிகிரிக்கு மேல வெயிலு.இவனுங்க வேற.முடியல. மண்ட சூடேரறி மயிரெல்லாம் கொட்டிருச்சின்னா, எல்லாரும் என்னை அறிவாளின்னு நெனச்சுருவாய்ங்கடா. விட்ரு.யப்பா...ஷ்...ஷ்...ஷ்.

வால்பையன் said...

நைட்டு வலுக்கட்டாயமா பத்து நிமிசம் அந்த படம் பார்த்தேன்!

என் பொண்டாட்டி உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சான்னு கேக்குறா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டக்ளஸ்....... said...

தப்புத்தான்.. எங்க தளபதி, நாடோடிகள் படத்துல நடிக்காம விட்டது தப்புத்தான்.
என்னாதான் இருந்தாலும் எங்க அண்ணனோட் புகழுக்கு முன்னாடி ஆன்டர்சன்னு, பீட்டர்சன்னு எல்லாருமே கால் தூசிதான். சில விஷமிகளின் பேச்சை நம்பாதீர்கள் தோழர்களே..
இவை அனைத்திற்கும் எங்கள் "வேட்டைப்புலி" மற்றும் "துஷ்மன்" பதில் சொல்லும் என்பதை இங்கே ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

234ம் நமதே..!
40ம் நமதே..!

ஊர்சுற்றி said...

என்னதான் ஆண்டர்சன் வந்தாலும் எங்க வீரத்தளபதி முன்னால் எல்லாம் தூசுதான். 'வேட்டைப்புலி' யை ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர் கூட்டம்.


வேளச்சேரி(மேற்கு),
சென்னை.

:)

Anonymous said...

தல ஜேகேஆர் வாழ்க