CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, January 20, 2010

ஜே.கே.ஆர்.MP நடிக்கும் ராஜ்ஜியத்தில் ஒருவன்..(லாஜிக்குடன்)..!

நாயகன், பரபரஅரசியல் அவதாரம், கடகட எம்.பி அரிதாரத்திற்குப் பின், ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட்த்தைப் பார்ர்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி, தன் மன்ற நிர்வாகிகளோடு நம் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்.எம்.பி. அவர்கள் அவருடைய அடுத்த திரைப்படம் குறித்து பெலிடா நாசிகண்டர் மலேசியன் ரெஸ்ட்ராண்டில் கலந்தாலோசிக்கிறார்.

போர்ப்படைத் தளபதி.கார்க்கி,செயலாளர்.வால்பையன்,தேர்தல் பொறுப்பாளர்.ராஜூ ஆகியோர் ஆஜர்.

JKR: என்ன பாஸ், எல்லாரும் சௌக்கியமா..?

அனைவரும் கோரஸாக, ”சௌக்கியம் தளபதி” என்று கத்திய கத்தல் விண்ணைக் கந்தலாக்கியதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா உடன்பிறப்புகளே..!

JKR: இன்னிக்கு டக் ஆஃப் த டவுனே ஆயிரத்தில் ஒருவன் தானே.! ஆக்சுவலி நானும் அந்த மாதிரி ஒரு ப்ராஜக்ட் பண்றதுக்கு ஆசைப்படுறேன். அதுக்கு, என்னோட நலவிரும்பிகளான(?) உங்களோடு ஆலோசிக்கனும்ன்னு ஆசைப்படுறேன். டெல் மீ யுவர் தாட்ஸ்.

கார்க்கி: அதெல்லாம் ஒன்னும் வேணாம் தலைவரே..! அந்த பட்த்துல் லாஜிக்கே இல்ல. கல்லத் தள்ளி வுடுறானுக. கப்பல்ல போறானுக. ஹெலிகாப்டர் வருது. கத்திச்சண்டை போடுறானுக. ஒரே இம்சைப்பா.

JKR: நீங்க என்ன பாஸ் இப்புடி சொல்லீட்டீங்க...? எல்லாரும் செத்து மடியற ரேஞ்சுக்கு சிலாகிச்சுட்டுருக்காங்களேய்யா..?

ராஜு: ஆனா, தல எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது.

வால்பையன் திவிரமாக எதனையோ யோசித்துக்கோண்டேயிருக்க, JKR அவரை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.

கார்க்கி: அதெல்லாம் வேணாம் தல. ராஜூவுக்கு புடிச்சிருந்தா படத்துல லாஜிக் இருக்குனு அர்த்தமில்லை. அதனால நம்ம வீரபாண்டிய கட்டபொம்மனை இயக்குனர் பீரங்கி “பேரரசு”க்கிட்ட சொல்லி ரீமேக் பண்ணீரலாம்.கவலப்படாதீங்க..! மியூஸிக்கு ரகுமான்கிட்ட சொல்லி ஒரு குறுந்தொகையை ரீமிக்ஸ் பண்ணிடலாம்.
பலே வெள்ளையத்தேவா..!

ராஜு: ஆனா, தல எனக்கு படம் மிகவும் பிடித்திருந்த்து.

JKR: நீ என்னாய்யா கீழ விழுந்து கீறல் வந்த ரெக்கார்டு மாதிரி ஒரே டயலாக்கயே உளறிட்டு இருக்கேயாயா..? என்னா மேட்டரு..?

ராஜூ, கீழே குனிந்து எதயோ தேடுவது போல, தேடுகின்றார். ( ஃபீல் பண்றாராம்மாம்)

கார்க்கி: ஓய்..ஒய்ய்...(விசிலடிக்கிறார்)

JKR, கார்க்கியை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு, மீண்டும் வால்பையன் யோசித்துக் கொண்டேயிருப்பதைப் பார்த்து டரியலாகிறார்.

ராஜு: தல, ஒன்னுமேயில்லை.ஒருவன்னு முடியுற எல்லா படமும் சர்ச்சைய உண்டுபண்ணி வெற்றியடைஞ்சுரும்னு கண்ணான்னு ஒருத்தரு சொன்னாரு. அதுனால உங்க பட்த்துக்கு பூஜ்ஜி..ச்சே..”ராஜ்ஜியத்தில் ஒருவன்”னு பேர் வச்சிரலாம் தல. இசையருவில நீங்க வந்து லைவ்ல பேசுங்க. அப்படியே கலைஞரையும் போன் பண்ணச் சொல்லீட்டா
சும்மா அதிரமுல்ல..?

JKR: அய், இந்த மேட்டர் நல்லாருக்கே, கதையச் சொல்லுய்யா..! ஸ்கிரிப்ட் சொல்லு..!

ராஜு: ஸ்கிரிப்ட் எல்லாம் எதுக்கு தலைவரே, ஒரே ஒரு ஒன்லைனர் இருந்தா சூட்டிங் போயிரலாமே..!

வால்பையன் மட்டும் இன்னும் யோசித்தபடியே, நிலைகுத்திய கண்களுடன்...

கார்க்கி: தல, இந்த ராஜுன்றவனோட பேச்சை நம்பாதீங்க.கவுத்தீருவான். ஸ்கிரிப்ட் முழுசா ரெடி பண்ணிட்டுதான் சூட்டிங் போகனும்ன்றதுதான் டைரக்‌ஷன்ல பால பாடம். இப்பிடித்தான் ஜேம்ஸ்கேமரூன் 96% பட்த்த முடிச்சார்.

JKR: அது யாருங்க பாஸ்..? ஜூஸ் கம்ர்க்கட்டு..?

கார்க்கி தலையடித்துக் கொள்கிறார்.

ராஜு: கார்க்கிண்ணா, பாலா படமா இருந்தா என்ன..? அமீர் படமா இருந்தா என்ன..? நம்ம செல்வராகவன் படத்த்தானே உல்டா பண்ணப் போறோம். பாலாவையெல்லாம் ஏன் இழுக்குறீங்க..?

கார்க்கி மீண்டும் அஜித்திலடித்துக் கொள்கிறார்.

JKR “இது தேவையா..?” என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு மூவரையும் வெறித்துப்பார்க்கிறார்.
இவ்வளவு களேபரத்திலும் வால்பையன் மட்டும் யோசித்துக் கொண்டேயிருக்கிறார். JKR அவரைத் தோளில் தட்டி, “என்ன” என்பது போல் பார்க்கிறார். இனி வால்ஸ் மியூசிக் ஸ்டார்ஸ்...!

வால்பையன்: தலைவரே, இந்த படத்த நம்ம கொஞ்சம் பகுத்தறிவோட அணுகினோம்ன்னா, சண்டைக்கு காரணமே பாண்டிய குடும்பத்தின் குலதெயவச்சிலைதான்.ஆக, கடவுள்ன்னு ஒருத்தர் வந்தாலே பிரச்சனைதான்னு டைரக்டர் மறைமுகமா சொல்லவர்றார். அதுனால, இது அப்பட்டமான ஒரு அக்மார்க் ஆன்மீகப்படம். இது என்னோட பார்வை மட்டுமே..!

JKR: என்ன பாஸ் உங்க பார்வை பெரிய கொலைவெறிப்பார்வையா இருக்கே..!

வால்பையன் ஒரு சிறிய புன்முறுவலோடு, தன் நண்பர் ஒருவருக்கு போன் செய்து, ஜே.கே.ஆருடன் பேசும்படிச் சொல்லித் தருகின்றார்.

கார்க்கியும் ராஜுவும் முழித்துக் கொண்டே,ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.

அந்த போன் ஆசாமியுடன் பேச்சு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, ”ஆணியே புடுங்க வேணாம் சாமி..” ரேஞ்சுக்கு எகிறி, ரெஸ்ட்டாரண்டின் ஒருபகுதி இருட்டில் எகிறி ஓடி மறைகின்றார் JKR.

பிறகு,வால்பையன் சொல்லித்தான் அந்த போன் ஆசாமி கும்க்கி எனவும் அவர் ஜே.கே.ஆருடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிப் பேசியுள்ளார் என்பதும் கார்க்கிக்கும் ராஜுவுக்கும் தெரியும்.

உரிமைதுறப்பான்: நிகழ்வில் வரும் சம்பவங்களும் பெயர்களும் 100% கற்பனையே..!

Next மீட் பண்ணுவோம்
♠ராஜூ♠

Friday, August 21, 2009

மோட்சம் அடைய எளிய வழி, (வலியுடன்).

வாழ்க ஜே.கே.ஆர்.எம்.பி..!. வள‌ர்க அவர்தம் புகழ்..!

அன்புடையீர்,
உபயகுச்சலோபரி.நிகழும் மங்களகரமான் விரோதி வருடம், ஆவணி மாதம், 12ம் நாளும் புனித ரமலான் மாதம் 7ம் நாளும் ஆகஸ்ட் மாதம் 28ம் நாளுமான‌ வெள்ளிக்கிழமையன்று ஏதோ ஒரு நட்சத்திரமும் ஒரு கெரகமும் மரணயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், மாலை 7.30 மணிக்குமேல் 7.31 மணிக்குள் ஏதோ ஒரு லக்கினத்தில், இடைத் தேர்தலில் எங்கள் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், கலைஞர் தொலைக்காட்சியில்,பதிவுலக பட்டிஷ்டா,தமிழக விடிவெள்ளி,முகவையின் முத்து,ந‌ம் வலையுலக சொத்து,சின்னப் பகவதி, சிங்காரத் தமிழன், அண்ணன்
ஜே.கே.ஆர்.எம்.பி. அவர்கள் நடித்த சூப்பர் டூப்பர் மெகா ஹிட் திரைப்படமான "நாயகன்"(THE REAL HERO) திரைப்படம் திரையிட இருப்பதால், தாங்கள் தங்கள் சுற்றம் சூழ, டிவி முன்பு அமர்ந்து வெள்ளிக்கிழமையன்று கலைஞர் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிறச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படத்தைப் பார்த்து பிறவிப்பயனையும் அடையலாம்.


தங்களன்புள்ள,

ஜே.கே.ஆர். எம்.பி.மன்ற நிர்வாகிகள்.
வலையுலகம்.

அவ்வண்ணமே கோரும்,
கலைஞர் தொலைக்காட்சி.
"கலை"யுலகம்.



(இரு வீட்டார் அழைப்பு.)



டிஸ்கி: இப்படத்தை 7.30 மணிக்கு திரையிடுவதில் எவ்வித உள்குத்து இல்லையென்று கலைஞர் டிவி,நமக்கு ஃபேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

Tuesday, July 21, 2009

ஜே.கே.ரித்திஷ் M.P. யிடம் பிடித்த 10.

* நாயகன் பட கிளைமெக்ஸுல மீன் தொட்டிய துப்பாக்கியால, கரெக்டா அந்த புல்லட்டோட டயாமீட்டர் அளவுக்கு ஒரு ஓட்டை போடுவீங்களே அது பிடிக்கும்.

* நீங்க துப்பாக்கி புடிக்கிற அழகுக்காகவே நாயகன் படத்தை நூறுதடவை பார்க்கலாம்.

* ஆட்டோ டிரைவர்ல இருந்து ஆளுநர் வரைக்கும் அள்ளி அள்ளிக் குடுப்பீங்களே,அது பிடிக்கும்.

* கானல் நீர் படத்து டிரையிலர்ல இன்ட்ரோ சீன்ல அப்ப்டியே பேன்ட் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு ஸ்டைலா நடந்து வருவீங்களே, அத பிடிக்காதவன் எவனாச்சும் இருக்க முடியுமா..

* யாரோ ஒரு பிரபல அரசியல் தலைவரிடம் "அமைச்சர் பதவிக்கி எவ்ளோ செலவாகும்..?"ன்னு நீங்க கேட்டீங்களாமே.
அந்த அப்பாவித்தனம் உஙகளத் தவிர வேற யாருக்கு வரும் தலைவா..?

* நீங்க நாயகன் படத்துல, சங்கீதாவ காப்பத்துற அந்த அலட்டலில்லாத நடிப்புக்காக எத்தனை தடவை வேணும்ன்னாலும், யாரு வேணும்ன்னாலும் சங்கீதாவக் கடத்திட்டுப் போகலாம்.

* உங்களோட அரசியல் போஸ்டருக்கு நீங்க அனுமதிச்சு ரசிச்சு போடுற வசனத்துக்கே, நாங்களெல்லாம் அடிமை தலைவரே. மறக்க முடியுமா அந்த "வடபழனி வாக்காளப் பெருமக்களை".

* படத்துல நடிக்கிற அந்த கேரக்டராவே மாறுற திறமையும் அழகும் உங்களத் தவிர வேற யாருக்கு வரும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்..ஸாரி..ஸாரி..கேப்போம்.

* என்னாதான் எல்லாரும் ஓட்டுனாலும் தைரியமா "வேட்டைப்புலி" வேலைகளப் பாத்துக்குட்டி இருக்கீங்களே, அந்த அசாத்திய தைரியம் பிடிக்கும்.

* பத்தாவதா நிறைய வருது. உங்களோட காஸ்ட்யூம் , உங்க ஹுயூமர் சென்ஸ், அரசியல் நடவடிக்கைகள்ன்னு எல்லாமே பிடிக்கும் தலைவரே.

வாழ்க தமிழ்... வளர்க ஜே.கே.ஆர்.M.P.புகழ்...!

என்றென்றும் உங்கள் வழியில் டக்ளஸ்...

Saturday, July 11, 2009

யாருடா அது ஆன்டர்சன்னு...!

யாரோ சாம் ஆன்டர்சன்னாம், ஜீ டிவியாம், அதுல இன்னைக்கு நைட்டு அந்தாளு நடிச்ச, யாரோ யாரோடி, (ஸ்டெப்னீ)படம் போடுறாங்களாம்.போடட்டும்.தப்பில்லை. ஆனா, அந்தாளை எங்க அண்ணன் கூட‌ ஒப்பிட்டு, அடுத்த வீரத்தளபதி,வருங்கால முதல்வர்,வருங்கால அமெரிக்க‌ பிரதமர்ன்னு சொன்னீங்க.அவ்வளவுதான்,நாங்கல்லாம் "நாயகன்" படத்தையே கலைஞர் டி.வியில போட்டவிய்ங்க. எங்க அண்ணன் ஏதோ கொஞ்ச காலம் அரசியல், எம்.பி., பிரச்சாரம், பதவியேற்பு, மக்கள் குறை கேட்புன்னு பிஸியா இருந்தாக்கா, நீங்க என்னாடான்னா, அதுக்குள்ள புது ஆளை ஃபீல்டுல இறக்கப் பாக்குறீங்களா..? பிச்சு புடுவேன் பிச்சு. நாங்களும் ரெடியாயிட்டிதான்டி இருக்கோம். தயாரியிட்டு இருக்கு "வேட்டைப்புலி". அனுஷ்கா வேட்டைக்காரன்லயும் பாவனா அசல்லயும் பிஸியா இருக்குறதுனால் எங்க அண்ணனுக்கு சரியான ஜோடி இன்னும் அமையல. அதுக்குக்காகத்தான் வெயிட்டிங். மவனே, இன்னும் கொஞ்ச நாள்ல டரியலாகப் போறீங்க..!

எங்க அண்ணன் டெல்லி போயிட்டார்ல. அதனால‌ நாங்க பாலிவுட்லயும் கால் வைக்கப் போறோம். ஆமாப்பு.."வேட்டைப்புலி"ய "துஷ்மன்"ன்ற பேர்ல ஹிந்திலயும் டப்பிங் பண்ணி வெளியிடப் போறோம். பத்திக்கிச்சுடா பாலிவுட்டு. சும்மா ஷாரூக்கான், அமீர்கான்லாம் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடிப் போயிரணும் ஓடி.. இப்போ த்ரிஷாவும் பாலிவுட்டுக்கு போயிருக்குறதுனால அவங்களும் கதாநாயகி லிஸ்ட்ல இருக்காங்க என்பதையும் இங்கு தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.Of Course ஜெனீலியா also.

ரத்தம் கொதிக்கின்றது. நாங்கள் ஓபாமாவேயே எங்கள் அண்ண்னோடு ஒப்பிடுவதை எங்கள் புகழுக்கு இழுக்கு என கருதிக் கொண்டிருக்கின்றோம். இந் நேரத்தில் சாம் ஆன்டர்சன்னை எங்களோடு ஒப்பிடுவது எங்களுக்கு மன சங்கடத்தையே தருகின்றது.இப்பிடி அகிலத்தையே இன்னும் சிறிது காலத்தில் ஆட்டிப் படைக்கப் போகின்ற எங்கள் தன்னிகரற்ற தலைவனை "சாம் ஆனடர்சன்"னோடு ஒப்பிட்டு எங்கள் அண்ணனின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதை ஒருக்காலும் தாங்க மற்றும் அனுமதிக்க முடியாது என்பதை எங்கள் மாமன்றத்தின் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறோம்.இவை அனைத்தும் கட்டாயம் எதிர்கட்சிகளின் சதியாகத்தான் இருக்கும் என 48422655வது ஒன்றியக் குழு தெரிவித்துள்ளதாக அறிகின்றோம்.

என்னைக்குமே நாங்கதான்டா டாப்பு.
மத்தவனெலாம் டூப்பு.
வருது பாரு வேட்டைப்புலி.
வந்தா,மவனே நீ காலி..
எங்க அண்ணன்தாண்டா சிங்கம்.
தமிழ்நாட்டின் தங்கம்.
சீண்டிப் பாக்காத சிங்கத்த..
தாங்க முடியாது அதோட சீற்றத்த.
முடிஞ்சு போகும் ஓங்கத.
எதிர்த்து நிக்காத முன்னாடி.
அப்பறமா, ஃபீல் பண்ணுவ பின்னாடி.
இது சிங்கத்தோட கோட்டைடா.
தில் இருந்தா வால ஆட்டுடா.
வெட்டிடுவோம் ஒட்ட நறுக்கி.
தாங்கமாட்ட தளபதியோட வெறிக்கி.
அண்ணன் கண்ணசைசா,
கொதிக்கும்டா கோலிவுட்டு.
பத்துக்கிரும்டா பாலிவுட்டு.
அடுத்த டார்கெட்டு டோலிவுட்டு.
2020ல ஹாலிவுட்டு.
இப்போ இருக்குறது பார்லிமென்ட்டு.

எங்க தளபதி சிரிச்சா தென்றலு.
அடிச்சா புயலு.
புடிச்சா முயலு
கொதிச்சா ஆயிலு.
மவனே,பேசாம போயிரு.


இங்ஙணம்.
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் M.P. ரசிகர் மன்றம்.

Friday, May 15, 2009

வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா

jkr

     எங்க தல சிங்கம்டா…

 

  தலைவர் கலைஞர் அவர்கள் எங்கள் தலைக்கு சீட் அறிவித்தவுடன் ஆ வென பிளந்த வாய்கள் தான் அனேகம். அவரின் மக்கள் செல்வாக்கு, அரசியல் அனுபவம், பொது சேவைகள் என எதுவும் தெரியாத தற்குறிகள் ஏதோ நாயகன் பட வெற்றிதான் அவருக்கு சீட் வாங்கித் தந்ததாக உளறினார்கள். பாஜகவின் திருநாவுக்கரசரை எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியுமா என்று சொன்னவர்களும் உண்டு.

இதோ எங்க சிங்கம் 3500 வாக்கள் முன்னிலையில் இருக்கிறது. பிராச்சர களத்தில் நாங்கள் குதித்த போது தலைமை எங்களுக்கிட்ட கட்டளை என்னத் தெரியுமா? இப்போதே அதிகம் பேச வேண்டாம். நம் வெற்றி பேசட்டும் என்றார்கள்.  இதொ கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி.

இது முடிவல்ல..

இது ஆரம்பம்.

இனிமேல் தான் பூகம்பம்….

Thursday, April 30, 2009

நாளைய வரலாற்றின் வாழ்த்து..!

வருங்கால் நிதியமைச்சர்..!
பதிவுலக பட்டிஷ்டா...!
தமிழக விடிவெள்ளி...!
அமெரிக்காவின் விடியாத வியாழன்..!
தன்மான கரடி..!
தேர்தல் சூறாவளி..!
முகவையின் முத்து..!
ந‌ம் வலையுலக சொத்து.!
ராமநாதபுரத்து மின்னல்..!
ஈடு இனையில்லா இடி..!
கலியுக வள்ளல்..!
சின்னப் பகவதி..!
சீறி வரு காளை..!
புரட்சி புறா..!
தன்னலமற்ற தலைவன்..!


நாளைய‌ தமிழக வரலாற்றை டெல்லியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் போகும் எங்கள் வீரத்தளபதி "ஜே.கே.ரித்திஷ்" சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...

இவண்
மன்ற நிர்வாகிகள்..

Sunday, April 12, 2009

தளபதியின் வாழ்த்து..!

நம்ம வீரத்தளபதி அண்ணன் "ஜே.கே.ரித்திஷ்" அவர்களின் அனல் பறக்கும் சூறாவளிப் பிரச்சாரம் இன்னும் சில‌ நாட்களில் இராமநாதபுரத்தில் தொடங்க உள்ளது.இராமநாதபுர மக்களே டரியலாகுங்கள்..ச்சே..தயாராகுங்கள். தளபதி அவர்கள் போஸ்டர்களுக்கு ஸ்டில் கொடுக்கும் வேலையில் ஒருகையில் துப்பாக்கியையும் ஒருகையில் வேட்டியையும் பிடித்தபடி பிஸியாக உள்ளார் என கழக உடன்பிறப்புகளும் கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.நம் வீரத்தளபதிக்கு ஆதரவாக,சில திரையுலக முண்ணனி(?) நட்சத்திரங்களும் பிரச்சாரத்தில் இறங்கப் போகின்றன.எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், எதிர்கட்சிகள் "தமிழ் புத்தாண்டு" என்ற ஒன்றை கொண்டு வந்து அண்ணனின் வெற்றியை தடுக்கப் பார்க்கின்றன.இருந்தாலும் அண்ணன் அவர்கள் தன் மன்ற நிர்வாகிகளின் மூலம் ரசிகர்களாகிய உங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இதோ அந்த செய்தி:



ம்ம்.. நாளை நமதே.. நாற்பதும் நமதே...ச்சே இராமநாதபுரமும் நமதே.

இவண்:
மன்ற நிர்வாகிகள்.

Tuesday, April 7, 2009

தளபதிக்கு புதுப் பட்டம்...

கழகக் கண்மணிகளே,

தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது, நம்ம பொருளாளர் அண்ணன் வேற காசு கொடுக்கறேன்னு சொல்லிட்டார்.தேர்தல் பிரச்சாரப் பாடல் வேற எழுதியாகி விட்டது. மீஜிக் போட ஏ.ஆர்.ரகுமானிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்கு கழகப் போர்ப்படைத் தளபதி அண்ணன் கார்க்கி சென்றிருப்பதாக தகவல். போஸ்டர் மற்றும் தோரணங்களுக்கு சொல்ல வேண்டும்.இப்போது பிரச்சனை என்னவென்றால் நம்முடைய தளபதிக்கு இப்போதுள்ள பட்டங்கள் எல்லாம் சரியாக,அவரது பெர்ஸ்னாலிட்டிக்கு பொருந்தாததாக இருக்கின்றதென பரவலான அதிர்ப்தி நிலவுவதாக எமக்கு தகவல் வந்துள்ளது.ஆகவே,தேர்தலை முன்னிட்டு அவருக்கு புது பட்டம் தருவதற்காக வாக்காளப் பெருமக்களாகிய உங்களிடன் ஆய்வு நடத்தவே இந்த பதிவு. சங்கத்து சிங்கங்களும் உங்கள் எண்ணத்தில் இருக்கும் பெயர்களை, அள்ளித்தெளிக்கும்படி மிகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இப்படிக்கு.
என்றென்றும் தளபதியின் வழியில் டக்ளஸ்,
தேர்தல் பொறுப்பாளர்.

தேர்தல் பிரச்சார பாடல்

பல்லவி


கட்டான ஸ்டீல் பாடி..
இதை காண கண் வேண்டும் கோடி.

சரணம் 1
வறியவர் வருவார் உன்னை நாடி.
எதிரிகள் ஒளிவார் ஓடி..

சரணம் 2
யார் இங்க கேடி யார் இங்க கேடி..
நாங்க தான் கேடி, மத்தவனெல்லாம் பேடி..

சரணம் 3
அடுத்த படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி...
அவ தான் எங்க தலைக்கேத்த ஜோடி...

மீண்டும் அதே பல்லவி

வலையுலகில் எங்கள் தலை ஜே.கே ரித்தீஷை கிண்டல் செய்தவர் எல்லாம் ஒடி ஒளியவேண்டும் இப்போது...

தலைக்கு வருகிற பாராளுமன்றத்தேர்தலில் ராமநாதபுரம் தொகுதில் சீட் கிடைத்துள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா, கலைஞருக்கு மூளை கெட்டுவிட்டது என்று கும்மியடிக்கும் நல்லதந்தி, ப்ளீச்சிங் பவுடர், வாலைபையன் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது வேற எதுவும் இல்லை..

ஷட்டப். வெயிட் அண்டு சீ...

ஒரு சின்ன உரையாடலை கவனிங்க...

ச்சின்னப்பையன்
: அப்பாடா, எப்படியோ தலைக்கு சீட் கெடைச்சிருச்சி. சீட் கெடைக்கலன்னா உண்ணாவிரதம் இருக்கலாம்னு நினைச்சேன்...:)))))

ராப்:
உண்ணாவிரதம் தானே இருக்கப்போற ? அதுக்கு எதுக்கு ஸ்மைலி ? நான் மு.க.ஸ்டாலின் வலைப்பூவுல போய் 'me tha first' 'you the worst' 'give the seat' அப்படீன்னு ஆயிரம் பின்னூட்டம் போடலாம்னு இருந்தேன்.

வால்பையன் : அவாஜ்க்க்க் ஆஅட்ஜூ fffஓ ச்டோஓ ச்ச்ச அவ்வ்வ்வ்...பார்ப்பனர்கள் வாழ்க..பெரியாரும் வாழ்க...நான் ஈரோடு...ஈ ரோடு போயி திருச்சி வந்தா மதுரை. மதுரையில அழகிரி..இது என்னுடைய நூறாவது குவாட்டர்.

புதுகை அப்துல்லா: டேய் என்னடா நாங்க இவ்ளோ சீரியசா பேசிக்கிட்டிருக்கோம், உனக்கு கிண்டலா தெரியுதா ? கார்க்கி, தூக்குடா இவனை...

கார்க்கி : சகா, போர்ப்படை தளபதின்னா கத்திய தூக்கிட்டு அலையனுமா ? அது ஒரு பட்டம்யா. நான் ராமநாதபுரத்துக்கு பிரச்சாரத்துக்கு கிளம்பறேன். அங்கியாவது மகளிரணியில ஒரு அட்டு பிகர் சிக்குதா பாப்போம்..

பழமைபேசி: அப்படித்தான் அமெரிக்காவுல ஒருதடவை, பள்ளயத்த பள்ளத்துல ஊத்தி, கோமியத்த கோப்பையில புடிச்சு...

வித்யா : யோவ் நான் கொலைவெறியாவறதுக்குள்ள இதுமாதிரி 'non serious' guys எல்லாரையும் ஆப் பண்ணிங்க. முகவையார் வாழ்க. அவர் புகழ் ஓங்குக.

செந்தழல் ரவி: பட்டம் குடுக்குறேன் குடுக்குறேன்னு ஏமாத்திக்கினே இருந்தானுவ. நானே அய்ரோப்பிய கிளைக்கழக செயலாளர் பட்டத்தை எடுத்துக்கவேண்டியதா போச்சு.

கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...\
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...
கனேஷ்: சூப்பர் தல. அருமை. நல்ல கும்மி கூட்டம் இது...

செந்தழல் ரவி: வெளங்கீரும் திரு கனேஷ் அவர்களே.

நர்சிம்: ஜூனியர் விகடனில் என்னுடைய முன்னூத்தம்பதாவது ஜோக்கு..

கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே
கனேஷ்: அந்த மெயில் ஐடிய எனக்கும் கொடுக்க கூடாதா, நானும் கும்மி அடிப்பேனே

பரிசல்: அய்யோ முடியல முடியல.

செந்தழல் ரவி: ஏய் இது வீரத்தளபதி ரசிகர் மன்ற கூட்டமா இல்லையா, பொதுப்பிரசினையை பேசுறத நிறுத்துங்க. தலை இலங்கையில அணுகுண்டு போடுவாரா இல்லையா அதை சொல்லுங்க...

அதிஷா: அய்யோ என்னாலயும் முடியல. இஞ்சி தின்ன குரங்கு, கஞ்சி குடிச்ச கருவாடு எல்லாம் எம்பி எலக்ஷன்ல நின்னா நான் சுண்டக்கஞ்சியா குடிச்சு கவுந்துடுவேன்..

புதுகை அப்துல்லா: அப்பாடா, இவன் ஒருத்தனாவது பாயிண்டுக்கு வந்தானே ?

Sunday, April 5, 2009

சிங்கம் களமிறங்கிருச்சுடோய்....

கண்களுக்கு எட்டா "கானல் நீர்"....
தாயகம் (?) காக்கும் " நாயகன்"....
முகவையின் "முதல் குடிமகன்"...
அநியாயத்திற்கு எதிரான "அவதாரம்".....
புதுமைகளின் "ஆ'ரம்பம்'"....
தமிழகத்தின் "ஒபாமா"...
தமிழ்த்திரையுலகின் புதிய "பரிணாமம்"...
ந‌ம் "வீரத் தளபதி"....
ஜே,கே. ரித்திஷ் அவர்களுக்கு இராமநாதபுரத்தில் நிற்க (உட்கார இல்லை) சீட் தரப்பட்டுள்ளது. என்பதை சங்கத்தின்
சார்பாக மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கப் போகும் இந்த‌ சிங்கத்திற்கு உங்கள் ஆதரவைத் தருவதும் தராததும் உங்கள் இஷ்டம்.

பின் குறிப்பு:இதுவரை டக்ளஸ் எனும் பதிவில் கிறுக்கிக் கொண்டிருந்த நான், கழகப் போர்ப் படைத்தளபதி அண்னன் கார்க்கியின் அழைப்பின் பெயரில் இங்கும் கிறுக்குகிறேன் என்பதை என் இந்த முதல் பதிவின் மூலம் தெரிவிக்கின்றேன். ஆகையால், எனக்கு தங்களின் நல் ஆதரவையும் கெட்ட ஆதரவையும் தந்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

Friday, April 3, 2009

சிங்கம் களமிறங்க போகுதுடோய்...

ரசிகர்களே..

தளபதிகளே..

புறப்படுங்கள்..

நம் வீரத்தளபதி இந்த தேர்தலில் பங்கெடுக்க முடிவு செய்திருக்கிறார். ராமனாதபுரம் தொகுதியை எப்படியும் தலைவர் கலைஞர் உண்மையான கலைஞனான நம் தலைவர் ஜே.கே.ஆருக்கே கொடுத்து விடுவார்.

நம்ம பொறுத்தவரை ஜே.கே.ஆர் தான் கலைஞர், அவர் நடிப்பதால்.

ஜே.கே.ஆர். தான் தளபதி. வீரத்தளபதி.

சீட் உறுதி ஆனதும் நம் பிராச்சாரத்தை தொடங்குவோம்.

Thursday, March 5, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வீரத்தளபதியின் ஜே.கே.ரித்தீஷின் பிறந்த நாளாம் இன்று. ஹேப்பி பர்த்டே தல:)

Friday, February 6, 2009

வீரத்தளபதியின் அடுத்த படம்

தளபதி படத்துக்கப்புறம் நம்ம தலைவர் வீரத்தளபதி ஜே.கே.ஆர் நடிக்கும் அடுத்த படத்தின் கதை கசிந்துள்ளது. மூன்று படங்களிலும் அனல் பறக்க ஆக்ஷன் இருந்ததால், பெண்களை குறிப்பாக இளம்பெண்களை கவரும் விதமாக முழுக்க முழுக்க காதல் சூப்(எத்தன நாள் தான் ரசமே சொட்டும்) ஆறாக ஒடும் யூத் சப்ஜெக்டில் நடிக்கிறார். ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது
என்பதற்காக இரண்டு சண்டைக்காட்சிகள் படத்தில் உண்டு. படத்தின் ஒன்லைன் இதுதான். மிகவும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஸாப்ட்வேர் கம்பெனியில் project manager பதவியில் இருக்கும் ஜே.கே.ஆர்க்கும், அதே கம்பெனியில் HR Executive வேலையில் இருக்கும் அனுஷ்காவிற்க்கு லவ்வோ லவ். அனுஷ்கா அந்த கம்பெனி ஓனரோட பொண்ணு. Recession காரணமாக கம்பெனியை மூட வேண்டிய சூழ்நிலை. இதனால் மனமுடைந்து போன அனுஷ்காவின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். காதலியின் தந்தை மரணத்துக்கு பழிவாங்கவும், கம்பெனியை சரிவிலிருந்து மீட்கவும் ஜே.கே.ஆர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே மிச்சக் கதை:)

முதல் பாதி இந்தியாவிலேயே படமாக்கப்படுமாம். கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்து உழைப்பால் முன்னேறுகிறார் வீரத்தளபதி. ஆதலால் காலேஜ் படிக்கும் பையனின் தோற்றத்துக்கு படாத பாடு பட்டு ச்சே கடும் உழைப்பால் மூன்றிலிருந்து மூணேமுக்கால் கிலோ வரை எடை குறைக்க யோசித்திருக்கிறாராம் வீரத்தளபதி. பிற்பாதியில் recessionஐ அழிக்க அதைத் தேடி அமெரிக்கா செல்கிறார். பிற்பாதி முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படும். ஜே.கே.ஆருக்கும், அனுஷ்காவிற்க்கும் உதவும் அமெரிக்க வாழ் தமிழ்பெண்ணாக நடிக்க காத்ரீனா கைஃபிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஜே.கே.ஆரும் காத்ரீனாவும் ஆடிப்பாட ஐட்டம் நம்பர் ஒன்றுக்கு இசையமைத்து தருமாறு ரஹ்மான் மிரட்டப்பட்டுள்ளார் ச்சே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் ஜே.கே.ஆரும் recessionம் மோதிக் கொ(ல்லும்)ள்ளும் காட்சி பெரும் பொருட்செலவில் உயர்ந்த கிராபிக்ஸ் தரத்தில் படமாக்கவும் முடிவுசெய்துள்ளார்களாம்.

ஜே.கே.ஆரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் அடுத்த பொங்கல் பரிசாக அமையும். மேலும் இந்தப் படத்திற்க்கு பொருத்தமான தலைப்பை ரசிகர்களே பரிந்துரைக்கலாமாம். சிறந்த தலைப்பு மன்றத்தின் மூலம் ஜே.கே.ஆரிடம் பரிந்துரைக்கப்பட்டு தக்க சன்மானம் வழங்கவும் முடிவாகியுள்ளது. ஆகவே சங்கத்து சிங்கங்கள் தங்களின் பொன்னான தலைப்பை அள்ளித்தெளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, December 24, 2008

மன்றத்து அறிவிப்பு.. பரிசை வென்றது யார்?

போன பதிவை படித்து Followers ஆனவர்களுக்கு சொன்னபடி ஆச்ச்ரியம் காத்திருக்கிறது. அது என்னெவென்பது தனிமடலில் தெரிவிக்கப்படும்.இன்னும் Followers ஆகாதவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஆகி விடுங்கள். பல பரிசுகளை வெல்லுங்கள். உலகம் அதிரப் போகும் சில விஷயங்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கிறது


ஆறு மாதங்களுக்கு முன்பே இந்தப் பதிவு எழுதிய அண்ணன் வால்பையன் அவர்கள் சங்க‌த்து செயலாள‌ராக நியமிக்கப் படிகிறார்.

**************************************

பல தடைகளையும்!! தாண்டி, பலத்த எதிர்பார்ப்புகளோடு, எதிரிகளின் மூஞ்சியில் கரியை பூசும் அளவுக்கு நமது தென்னக டாம் குரூஸ், ஒலகநாயகன் ரித்தீஷ் அவர்கள் நடித்த நாயகன் படம் ஈரோட்டில் வெளிவந்தது விட்டது, இனிவரும் அறுபது நாட்களுக்கு ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் வாங்கி விட்டதால் அதுவரை படம் பார்க்க இயலாத நிலையில் இருக்கிறேன். மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது, அந்த கஷ்டத்தை போக்கும் வகையில் நேற்று தொலைக்காட்சியில் தலைவர் படத்திலிருந்து ஒரு பாடல் ஒளிபரப்பப் பட்டது.

பல முன்னணி நடிகர்கள் கூட செய்திராத வகையில் ஒரு பாடலுக்கே, ஒரு முழு படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் செய்து அசத்தியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமான ஒன்று, அந்த ஒரு பாடலிலேயே தலைவர் பல கெட்டப்பில் வந்து தசாவதாரத்தின் சாதனையை முறியடித்தார்.

இந்த ஒரு பாடலுக்கு பதில் சொல்லுமா, வெளி வந்த, வெளிவர போகிற படங்கள் என்பது சந்தேகமே! நடிக்கும் இரண்டாவது படத்திலேயே நடனத்தில் பல புதுமைகளை புகுத்தி பார்பவர்களின் கால்கள் மட்டுமில்லாமல் "அது" "இது" என்று எல்லாவற்றையும் ஆட வைத்திருக்கிறார்.




வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நடிகர்களே, தம்மை பற்றி தாமே புகழ்ந்து பாடி கொண்டிருக்கும் இந்த அரசியல் உலகில், "நான் கக்கூஸ் போனா உனக்கென்ன"
"நீயும் நானும் மாமன் மச்சாண்டா" போன்ற தம்மை முன்னிறுத்தும் வார்த்தைகள் இல்லாமல், சமத்துவத்தையும், கல்வியின் தேவை மற்றும் அதை தீர்க்கும் வழியையும் இரண்டு வரிகளில் சொன்ன நமது தலைவர் இனி எல்லா நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனம் தான்.

அந்த வரிகள்
இருந்தாக்கா அள்ளிக்கொடு,
தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு,

இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடு என்றும், கற்ற கல்வியை கல்லாதவர்களுக்கு சொல்லிக்கொடு என்றும் சமுதாயத்தின் தற்போதைய தேவையை தமது பாட்டின் மூலமாக கொண்டிருப்பது, தலைவரின் சேவை உணர்ச்சியை எடுத்து காட்டுகிறது.

எங்கள் தலைவர் படத்தை நாங்கள் ஓட்டிவிடுவோம்
(தியேட்டரை விட்டு அல்ல, தியேட்டருக்குள்)
ஆனால் மற்ற ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்.

********************************************************************************

மேலும் போன பதிவை படித்து Followers ஆனவர்களுக்கு சொன்னபடி ஆச்ச்ரியம் காத்திருக்கிறது. அது என்னெவென்பது தனிமடலில் தெரிவிக்கப்படும்.இன்னும் Followers ஆகாதவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஆகி விடுங்கள். பல பரிசுகளை வெல்லுங்கள். உலகம் அதிரப் போகும் சில விஷயங்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கிறது

அனைவருக்கும் ஜே.கே.ஆர் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

Tuesday, December 23, 2008

Its serious. not a joke

சங்கத்து சிங்கங்களே,

இதுவரை 11 பேர் நம் Followers சங்கத்தில் ஆகி இருக்கிறார்கள். வருகிற ஞாயிற்றுக் கிழமைக்குள் followers ஆகிறவர்களுக்கு நம் சங்கத்தில் Golden member அந்தஸ்து கிடைக்கும். இதை வைத்து என்ன செய்யலாம் என்பது சஸ்பென்ஸ். ஆனால் இந்த வாய்ப்பை தவறவிடுகிறவர்கள் அடுத்த வாரம் அய்யோ மிஸ் பண்ணிட்டோமே என்று வருந்தப் போவது மட்டும் நிச்சயம்.

இன்னும் சில நாட்களில் நம் சங்கம் தலைப்பு செய்திகளில் அடிபட போவது மட்டும் உண்மை. இப்பொதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.

வீரத்தளபதியின் வள்ளல் குணம் நாம் அறிந்ததே.அதை குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் சங்கத்தில் பதவி கேட்பவர்கள் இதற்கு முன்னர் தாங்கள் ஜே.கே.ஆரைப் பற்றி எழுதிய பதிவின் லின்க்கோடு மெய்ல் அனுப்பலாம். பரிசீலிக்கப்படும்.

முந்துங்கள். வரும் ஞாயிற்றுக் கிழமை வரை மட்டுமே..

Wednesday, December 17, 2008

ஜே.கே.ஆர் - புகழ் பாடல்

வலையை மேய்ந்த போது பரவலாக என் கண்னில் படுவது வீரத்தளபதியை போற்றி எழுதும் பதிவுகள் தான். அவற்றில் ஒன்றுதான் இது. இதை எழுதியவரின் வலைப்பூ முகவரி http://enthanvaanam.blogspot.com. ஆனால் அவரின் தளத்தில் அவர் பெயர் கூட இல்லை. ஜே.கே.ஆரின் ரசிகர் என்பதால் இளங்சிங்கம் என்பது போன்ற பெயராகத்தான் இருக்க முடியும். அவர் எழுதிய பாடல் இதொ.(கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்)



ஜெயிக்கிறாரு ஜெயிக்கிறாரு ஜே.கே.ஆரு
அண்ணன் யாரு அண்ணன் யாரு கேட்டுப் பாரு
அண்ணந்தானே முறுக்குமீசை எம்.ஜி.ஆரு
தோக்காத தோக்காத கஜினி பாரு
உளராத உளராத ரஜினி பாரு

அண்ணன் படத்த பாத்து பாத்து சிரிக்கும் குழந்தை பாரு
கண்ணு ரெண்டில் கண்ணு ரெண்டில் சூரியன் பாரு


நடந்து வந்தா நடந்து வந்தா நைலு ரிவரு
எழுந்து நின்னா எழுந்து நின்னா ஈபில் டவரு

உக்காந்தா உக்காந்தா சீனாச் சுவரு
தானத்துல தானத்துல கர்ணன் பாரு

தர்மத்துல தர்மத்துல மனுநீதிச் சோழன் பாரு
பேச்சுலதான் பேச்சுலதான் சின்ன கலைஞர் பாரு

படிப்புலதான் படிப்புலதான் சிவில் இஞ்சினியர் பாரு
நகைச்சுவையில் நகைச்சுவையில் கலைவாணர் பாரு
நடிப்புலதான் நடிப்புலதான் அண்ணன் சிவாஜி சாரு
மனசுலதான் மனசுலதான் தலைவர் நம்பியாரு

ஆட்டோவுல ஆட்டோவுல போஸ்டரு பாரு
அரசியல்ல அரசியல்ல கிங் மேக்கர் பாரு

ஜெயிக்கிறாரு ஜெயிக்கிறாரு ஜே.கே.ஆரு
அண்ணன் யாரு யாரு கேட்டுப்பாரு
அண்ணந்தானே முறுக்குமீசை எம்.ஜி.ஆரு
தோக்காத தோக்காத கஜினி பாரு
உளராத உளராத ரஜினி பாரு

அண்ணன்தான் தமிழ்நாட்டின் ப்யூச்சரு பாரு
அண்ணன்தான் தமிழ்நாட்டின் ப்யூச்சரு பாரு

இதப் புரிஞ்சுக்காட்டி புரிஞ்சுக்காட்டி டேஞ்சரு பாரு
இதப் புரிஞ்சுக்காட்டி புரிஞ்சுக்காட்டி டேஞ்சரு பாரு

Saturday, December 13, 2008

வாழ்க்கையில் செய்த பாவம் தொலைய இதை சொல்லுங்கள்

எனக்கு தெரிஞ்ச ஒருவர் தலைவலிக்கும் முதுகுவலிக்கும் ஒரு வைத்தியம் சொன்னார். அதை என் நண்பன் ஒருவனிடம் சொன்னேன். அப்படி செய்த அவனுக்கு தலைவலி சுத்தமாக போய்விட்டதாக கூறினான். அதைக் கேட்ட இன்னொரு நண்பன் அவனுக்கும் அந்த வைத்திய முறையை சொல்லுமாறு வந்தான். அவனிடம் பேசியது அப்படியே இதோ...

மச்சி, உனக்கு ஏதோ வைத்தியம் தெரியுமாமே? எனக்கு தலைவலி உயிர் போதுடா... ஏதாவது செய்..

வேணாம் சாமீ.. நான் சொன்னதுக்கு அப்புறம் என்ன அடிக்க வருவ..

டேய், உன் வைத்தியம் வொர்க் அவுட் ஆவுதுனு பாலாஜி சொன்னான்.. ப்ளீஸ் மச்சி.. தாங்க முடியல...

காலைல, அஞ்சு மணிக்கு எழுந்திருக்கணும்? பரவாயில்லையா?

இந்த வலியால நான் தூங்கறதே இல்ல... நீ மேல சொல்லு

அஞ்சு மணிக்கு எழுந்த உடனே...

பல் தேய்க்கணுமா?

அவ்ளோ கஷ்டபடதேவயில்ல... எதுவும் செய்ய கூடாதுனு சொல்ல வந்தேன்... எழுந்து‌ அப்ப‌டியே க‌ட்டிலே நின்னு க‌ண்ணு ரெண்டையும் மூடிக்கிட்டு ,ஒரு கைய‌ நெஞ்சு மேல‌ வ‌ச்சிக்கிட்டு இன்னொரு கைய‌ த‌லைக்கு மேல‌ தூக்க‌ணும்.

டேய் என்ன‌ க‌லாய்க்கிறியா?

இதுக்குதான் நான் சொல்ல‌ மாட்டேனு சொன்னேன். போடா போ இந்த‌ த‌லைவ‌லியோடு ஏக‌ன் போய் பாரு..

அப்புற‌ம் நீ சொல்ற‌த‌ கேட்டா அப்ப‌டித்தான் இருக்கு.. கோச்சிக்காம‌ மேல‌ சொல்லு...

இப்ப‌டி நின்னுக்கிட்டு எந்த இடம் வலிக்குதோ அந்த இடத்த மனுசுல நினைச்சிக்கிட்டு இந்த‌ ம‌ந்திர‌த்த‌ சொன்னா வ‌லி சும்மா ச‌த்ய‌ம் விஷால் மாதிரி ப‌ற‌ந்து போயிடும்..

ச‌ரி, அந்த மந்திரத்த சொல்லு...யார்க்கிட்டேயும் சொல்ல‌க்கூடாதா?

சொல்றேன்டா.. இதுல என்ன ரகசியம்.. இத நீ யார்கிட்ட வேணா சொல்லலாம்.. எத்தணை பேர் கிட்ட நீ சொல்றீயோ அவ்ளோ நல்லது..

அட‌, அப்ப‌டியா? த‌லைவ‌லி நின்னா போதும்..

ம்ம்ம்... ச‌ரி,ரொம்ப‌ மொக்க‌ போடுறேன்.. மந்திர‌த்த‌ சொல்றேன்..


வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க...முகவை மைந்தன் மென்மேலும் வளர்க.

Thursday, December 11, 2008

வலையுலகத்தை கலக்க வரும் சிங்கங்கள்

வலையுலக பெரியோர்களே, தாய்மார்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே,

அவ்வபோது தத்தம் பதிவிலே தள‌பதியின் புகழ்பாடி வந்த நாங்கள் இதோ சொந்தமாக ஒரு வலைப்பூவை உருவாக்கி இருக்கிறோம். எங்கள் சங்கத்தின் முக்கியமான நோக்கம், உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் அகிலாண்ட நாயகனின் ரசிகர்களை ஒன்று திரட்டுவதே. 2009ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் ஹிட்ஸும் நூறு உறுப்பினர்கள் சேர்ப்பதுமே எங்கள் லட்சியம். சங்கத்தில் சேர விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி jkrfanclub@gmail.com 

மன்றத்து நிர்வாகிகள்

தலைவர் ராப்
துணைத்தலைவர் ச்சின்னப்பையன்
பொருளாளர் புதுகை.அப்துல்லா
கொள்கை.ப.செயலாளர் வித்யா 
சிங்கை மன்ற தலைவர் ஜோஸப் பால்ராஜ் 
போர்படை தள‌பதி கார்க்கி

மறக்காமல் உங்கள் வருகையை பின்னூட்டம் மூலம் பதிவு செய்யுங்கள். ஆச்சரியமூட்டும் பல பரிசுகள் காத்திருக்கின்றன.

Wednesday, December 10, 2008

ஜே.கே.ரித்திஷை வாழ்த்துகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி

வீரத்தளபதியின் நாயகன் வெற்றி விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ர‌ஜினி வருவார் என கோடம்பாக்கம் பட்சி சொல்லுகிறது. அவர் வந்தால் என்ன பேசுவார் என்று ஒரு சிறு கற்பனை.

************************************************ 

"தமிழக முதல்வருக்கும், மேடையில் உள்ள மற்ற பெரிய மனிதர்களுக்கும் , விழா நாயகன் வீரத்தளபதி ரித்தீஷ் அவர்களுக்கும் வருகை தந்துள்ள அனைவருக்கும் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் ரசிக பெருமக்களுக்கும் நன்றி.


இந்த விழாவிற்கு என்னை அழைச்சப்ப நான் போலாமா வேணாமானு யோசிச்சேன். வரலைனா என்ன ஆகும், ரித்தீஷ் சூப்பர்ஸ்டார் ஆகிறது எனக்கு பிடிக்கலனு எழுதுவாங்க.அது தப்பு. வந்தா, இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு நான் ஒத்துகிட்டதா எழுதுவாங்க. என்னடா செய்யலாம் யோசிச்சப்பதான் தோணிச்சு. வரேனு சொல்லிட்டேன். அப்ப எனக்கு சில பேரு ஃபோன் பண்ணி நீங்க போனா அவரு பெரிய ஆளு ஆயிடுவாரு.அதனால் போவாதீங்கனு சொன்னங்க.அதுக்கு நான் சொன்னேன், நான் போய் தான் ஜே.கே.ஆர் பெரிய ஆள் ஆகனும்னு இல்ல. அவரு நல்ல மனுசுக்கு நான் போய்த்தான் ஆகனும்னு. சரிதானே? (ஆமாம் என்று கத்துகிறார்கள் ராப்,ச்சின்னப்பயன்,அப்துல்லா,பால்ராஜ் மற்ற சங்கத்து சிங்கங்கள்)


ஒரு சின்னக் கதை சொல்றேன். எல்லாக் கல்யாணத்திலும் ஒரு கொம்பு ஒன்னு நடுவாங்க. நல்லா உயரமா இருக்கும். அது ஆடாம இருக்கனும். அப்படி ஆடுச்சினா தலை மேல அடிப்பாங்க. அது ஆட அடி அடி விழுந்துட்டே இருக்கும். எப்போ ஆடுறத நிறுத்துதோ அப்பதான் அடி விழுறுது நிக்கும். நான் அஜித்த பத்தி சொல்லல. ஆனா நம்ம ரித்தீஷ் ஆடுறத பாத்துக்கிட்டே இருக்கலாம். " நிலா நிலா ஓடி வா" தான் இப்போ குழந்தைகளுக்கு புடிச்ச பாட்டு. ஆண‌வத்துல ஆடினாத்தான் அடி விழும். இது ஆனந்தத்துல ஆடுறது.


என் படத்துல ஒரு பாட்டு வரும் "சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா" . இந்தக் காலத்து குழந்தைகள் கிட்ட கேட்டா ரித்திஷ்னு தான் சொல்லும். கானல் நீர் முகவைல மட்டும்தான் 100 நாள் ஓடிச்சு. நாயகன் எல்லா ஊரிலும் ஓடுது. இவர் இன்று போல் என்றும் வாழ்ந்து பல பேரை வாழ வைக்க வேண்டுமென எல்லாம் வல்ல பாபாஜியை கேட்டுக்கொள்கிறேன். ************************************************


பி.கு: அப்துல்லா பதிவில் நடந்த கும்மியில் பங்கேற்ற அனைத்து ஜே.கே.ஆர் ரசிகர்களுக்கும் நன்றி. நாயகன் 100 நாட்களை தான்டி ஒடும் நாடுகள் எவை என்ற தகவல் சீக்க்ரம் வெளியிடப்படும்.

ஜே.கே.ஆரின் இணையத்தளம்

வீரத்தளபதியின் ரசிகர்களுக்காக ஒரு தளம்... அதுவும் வலை அல்ல, இணையத்தளம்... நாயகனின் நடிகன்,அரசியல்,சமூக சேவை என‌ மூன்று முகத்தை பற்றிய தெளிவான விவரங்களோடு சும்மா பட்டய கிளப்புதுங்க... இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும் படிக்க போறதில்ல... போங்க, இங்கக்ளிக்கி தலைவர் தரிசனம் பாருங்க..